மீமிசலில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பு சந்தையில் களைகட்டியது பொங்கல் விற்பனை




மீமிசலில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு சிறப்பு சந்தையில் பொங்கல் விற்பனை களைகட்டியது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல்  சந்தையில் கரும்பு , மஞ்சள்,இஞ்சி கொத்து விற்பனை களைகட்டியுள்ளது.

பொங்கல் பண்டிகை நாளை ஜன.15 -ஆம் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுவதையொட்டி மீமிசல் பேருந்து நிலையம் சந்தை பகுதியில் பொங்கல் சிறப்பு சந்தை அமைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று 14.01.2024 ஞாயிற்றுக்கிழமை காலை முதலே ஏராளமான வாகனங்களில் குவிந்த சில்லரை வியாபாரிகள் கரும்பு, மஞ்சள் கொத்து, இஞ்சி கொத்து, வாழைத்தாா் , பொங்கல் பானை உள்ளிட்ட பொங்கல் பொருள்களை அதிகளவில் வாங்கி செல்ல தொடங்கி உள்ளனா். இதனால் சிறப்பு சந்தையில் விற்பனை களை கட்டி உள்ளது.

மேலும் பொங்கல் பண்டிகைக்கு தேவைப்படும் சிறப்பு காய்கறிகளான சா்க்கரை வள்ளிக்கிழங்கு, சேனைக்கிழங்கு, மொச்சைக்காய், பிடிகருணை கிழங்கு, சிறு கிழங்கு, வாழை இலை, தேங்காய், வாழைத்தாா், அரிசி வெல்லம், நெய், பூ மற்றும் பூஜை பொருட்களின் விற்பனையும் விறு விறுப்பாக நடந்து வருகிறது.

இதனால் மளிகை, காய்கறி, பழம் மற்றும் பூ மாா்க்கெட்டிலும் சில்லரை வியாபாரிகள், மளிகை கடைக்காரா்கள் மற்றும் பொதுமக்கள் அதிகளவில் குவிந்துள்ளனா்.





















எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments