தேர்தல் விழிப்புணர்வு வினாடி-வினா போட்டி 21-ந்தேதி நடக்கிறது
இந்திய தேர்தல் ஆணையத்தின்படி, தமிழ்நாட்டில் வாக்காளர்கள் தேர்தல் நடைமுறையில் பங்கேற்பதை அதிகரிக்கும் நோக்கில் 14-வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேர்தல் விழிப்புணர்வு திட்டத்தின்படி மாநில அளவிலான பொது மக்களுக்கான வினாடி- வினா போட்டி வருகிற 21-ந் தேதி காலை 11 மணி முதல் 11.15 வரை நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ள நபர்கள் இணையதள முகவரியில் தங்கள் பெயர் மற்றும் விவரங்களை பதிவு செய்யலாம். இந்த போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் தங்கள் விவரங்களை இணையதளத்தில் இன்றுக்குள் (வெள்ளிக்கிழமை) பதிவு செய்ய அனுமதிக்கப்படும். இதில் கலந்து கொள்வதற்கு பங்கேற்பாளரின் செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி கட்டாயமாக உள்ளீடு செய்யப்பட வேண்டும். இந்தியாவின் தேர்தல்கள் என்ற தலைப்பின் அடிப்படையில் இந்த போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான மாநில உதவி மைய எண் 1800-4252-1950 மற்றும் மாவட்ட உதவி மைய எண் 1950 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட தகவல் புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments