புதுக்கோட்டை மாவட்டத்தில் 497 ஊராட்சிகளிலும் 26-ந் தேதி கிராம சபை கூட்டம்குடியரசு தினமான 26-ந் தேதி காலை 11 மணிக்கு புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 497 கிராம ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கிராம ஊராட்சி நிர்வாக மற்றும் பொது நிதி செலவினம் குறித்து விவாதித்தல், கிராம ஊராட்சியின் தணிக்கை அறிக்கை, கொசுக்கள் மூலம் பரவும் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது. மேலும் மக்கள் திட்டமிடல் இயக்கம் மூலம் 2024-25-ம் நிதியாண்டிற்கான கிராம வளர்ச்சி திட்டம், தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), ஜல் ஜீவன் மிஷன் உள்ளிட்ட அரசின் திட்டங்கள் மற்றும் ஊராட்சியின் செயல்பாடுகள் பற்றிய விவரங்களை தெரிந்து கொண்டு பயன்பெறும் வகையில் பொதுமக்கள், மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் என அனைவரும் அதிகளவில் கலந்துகொள்ளுமாறு கலெக்டர் மெர்சிரம்யா தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments