செகந்திராபாத் - இராமநாதபுரம் வாரந்திர சிறப்பு ரயில் அடுத்த இரு வாரங்களுக்கு முழுமையாக ரத்து - தெற்கு ரயில்வே அறிவிப்பு




திருவாரூர் திருத்துறைப்பூண்டி முத்துப்பேட்டை அதிராம்பட்டினம் பட்டுக்கோட்டை அறந்தாங்கி காரைக்குடி வழியாக செல்லும் செகந்திராபாத் இராமநாதபுரம் வாரந்திர சிறப்பு ரயில் அடுத்த இரு வாரங்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது 

செகந்திராபாத் - இராமநாதபுரம் 

செகந்திராபாத் -ராமேஸ்வரம்   (வண்டி எண் 07695)
வாராந்திர  
சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் ஒவ்வொரு வாரமும் புதன்கிழமை தோறும் இரவு 9.10 மணிக்கு செகந்திராபாத்தில் இருந்து புறப்பட்டு மறுநாள் வியாழக்கிழமை காலை 11.20 மணிக்கு சென்னை எழும்பூரை அடைகிறது. பின்னர் அங்கிருந்து செங்கல்பட்டு விழுப்புரம் திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) சிதம்பரம் சீர்காழி மயிலாடுதுறை திருவாரூர் திருத்துறைப்பூண்டி அதிராம்பட்டினம்  பட்டுக்கோட்டை அறந்தாங்கி  காரைக்குடி  சிவகங்கை மானாமதுரை வழியாக சென்று வியாழக்கிழமை இரவு 10.30 மணிக்கு இராமநாதபுரம் சென்றடையும்.

இராமநாதபுரம் - செகந்திராபாத் 

இதைப்போல மறுமார்க்கத்தில் இராமநாதபுரம் - செகந்திராபாத் (வண்டி எண் 07696) வாரந்திர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரயில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தோறும் காலை 9.50 மணிக்கு இராமநாதபுரத்தில் இருந்து புறப்பட்டு  மானாமதுரை சிவகங்கை காரைக்குடி  அறந்தாங்கி  பட்டுக்கோட்டை அதிராம்பட்டினம்
முத்துப்பேட்டை திருத்துறைப்பூண்டி   திருவாரூர்  மயிலாடுதுறை சீர்காழி சிதம்பரம் திருப்பாதிரிப்புலியூர் (கடலூர்) விழுப்புரம் செங்கல்பட்டு வழியாக சென்னை எழும்பூர் வெள்ளிக்கிழமை  இரவு 9.50‌ மணிக்கு அடையும் பின்னர் மறுநாள் சனிக்கிழமை மதியம் 12.50 மணிக்கு செகந்திராபாத்தை அடைகிறது.

ரயில் சேவையில் மாற்றம்

நிர்வாக காரணங்களுக்காக

வண்டி எண் 07695 செகந்திராபாத் - ராமநாதபுரம் வாராந்திர சிறப்பு விரைவு ரயில் 24-01-2024,31-01-2024 ஆகிய இரு நாட்களில் இயங்க வேண்டிய சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
மறுமார்க்கத்தில் 07696 இராமநாதபுரம் - செகந்திராபாத் வாரந்திர சிறப்பு ரயில் 26-01-2024 மற்றும் 02-02-2024 ஆகிய இரு தினங்களுக்கு சேவைகள் முற்றிலுமாக ரத்து செய்யப்படுகிறது

பிப்ரவரி 2 ஆம் தேதிக்கு பிறகு இந்த இரயிலின் சேவை நீட்டிப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகும்...

PC Credit : Sibi Kumar

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments