புதுக்கோட்டை மாவட்டத்தில் ராபி பருவ பயிர்களுக்கு காப்பீடு விவசாயிகள் பதிவு செய்ய வேண்டுகோள்




புதுக்கோட்டை மாவட்டத்தில் ராபி பருவத்தில் பயிர்களுக்கு விவசாயி கள் காப்பீடு பதிவு செய்ய வேளாண்மை துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

பயிர் காப்பீடு

புதுக்கோட்டை மாவட்டத்தில் 2023-24-ம் ஆண்டு ராபி பருவத்தில் நெல், மக்காச்சோளம், நிலக்கடலை, கரும்பு ஆகிய பயிர்கள் சாகுபடி மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் விவசாயிகள் அனைவரும் ராபி பருவத்தில் சாகுபடி செய்துள்ள பயிர்களுக்கு பிரதமரின் பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயிர் காப்பீடு பதிவு செய்து கொள்ளலாம்.

ஏக்கருக்கு விவசாயிகள் பிரீமியம் தொகையாக நெல்லுக்கு ரூ.513-ம், மக்காச்சோளம் ரூ.436.42-ம், நிலக்கடலைக்கு ரூ.423-ம், கரும்புக்கு ரூ.2,600-ம் செலுத்தி காப்பீடு செய்யலாம். நிலக்கடலை, மக்காச்சோளத்திற்கு காப்பீடு செய்ய வருகிற 31-ந் தேதியும், நெல்லுக்கு அடுத்த மாதம் (பிப்ரவரி) 29-ந் தேதியும், கரும்புக்கு மார்ச் மாதம் 30-ந் தேதியும் அருகில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் அல்லது பொது சேவை மையங்கள் ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் பயிர்காப்பீடு செய்து பயன்பெறலாம்.

ஆவணங்கள்

பயிர் காப்பீடு பதிவின் போது அடங்கல், சிட்டா நகல், வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை நகல், முன்மொழிவு படிவம், பதிவு படிவம் ஆகியவை அளிக்க வேண்டும் என வேளாண்மை துறையினர் தெரிவித்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments