அரசு பள்ளி மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்




அரசு பள்ளி மாணவிகள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் மெர்சிரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கல்வி உதவித்தொகை பெற...

மத்திய அரசின் நிதிப் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் பள்ளிப் படிப்பு கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ், அரசு பள்ளிகளில் 9, 10-ம் வகுப்பு பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் இனத்தை சேர்ந்த மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட உள்ளது.

பெற்றோரின் அதிகபட்ச ஆண்டு வருமானம் ரூ.2½ லட்சத்துக்குள் இருக்க வேண்டும். தகுதியுள்ள மாணவிகளுக்கு ஆண்டுக்கு ரூ.4 ஆயிரம் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும்.

கணக்கு தொடங்க வேண்டும்

எனவே, இத்திட்டத்தில் பயன் பெற விரும்பும் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 9,10-ம் வகுப்புப் பயிலும் மாணவிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் தங்களது பெயரில் வங்கிக் கணக்கு தொடங்க வேண்டும்.

பின்னர், ஆதார் எண், வங்கி விவரங்கள், பெற்றோர் வருமானச்சான்று, சாதிச்சான்று நகல்கலுடன் பள்ளி தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அவர்கள் மாணவிகளின் விவரங்களை எமிஸ் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments