கோபாலப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு.!




கோபாலப்பட்டிணம்அரசு மேல்நிலைப்பள்ளியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டானிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் 2021 வரை படித்த மாணவர்கள் சந்திக்கும் நிகழ்ச்சி நடந்தது.

இந்நிகழ்வில் ஆசிரியர்கள் வரவேற்று பேசினார். அதை தொடர்ந்து மாணவர்கள் தங்கள் பயின்ற பள்ளி அனுபவம் மற்றும் இப்பொழுது வேளையில் இருக்கின்ற அனுபவம் போன்ற மலரும் நினைவுகளை நினைவு கூர்ந்தும், பகிர்ந்து கொண்டனர். மேலும் ஆசிரியர்கள் பழைய மறக்க முடியாத சில நினைவுகளை நினைவு கூர்ந்து பகிர்ந்து கொண்டனர்.

மாணவர்கள் பேசுகையில் பள்ளியின் விரிவாக்கம் மற்றும் கட்டமைப்பு வசதிகளுக்கு தேவையான அனைத்தையும் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து உருவாக்க வேண்டும் என்று உணர்ச்சிபூர்வமாக பேசினர்.
இந்நிகழ்வில் ஆசிரியர்களுடன், முன்னாள் மாணவர்கள் புகைப்படம் எடுத்து கொண்டனர்.






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments