மீமிசலை தலையிடமாக கொண்டு , மீமிசல் , நாட்டாணி புரசக்குடி வெளிவயல் பொன்னமங்களம் ஆகிய ஊரட்சிகளை ஒருங்கினைத்து பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் - அறந்தாங்கியில் நடைபெற்ற தமுமுக மாவட்ட பொதுக்குழுவில் தீர்மானம்




மீமிசலை தலையிடமாக கொண்டு , மீமிசல் , நாட்டாணி புரசக்குடி வெளிவயல் பொன்னமங்களம் ஆகிய ஊரட்சிகளை ஒருங்கினைத்து பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டும் - அறந்தாங்கியில் நடைபெற்ற தமுமுக மாவட்ட பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது 

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் புதுக்கோட்டை ( கிழக்கு ) மாவட்ட பொதுக்குழு கூட்டம்  26.01.24 அன்று அறந்தாங்கி பவித்ரா மஹாலில் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் B.சேக்தாவூதீன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது

தமுமுக மாவட்ட செயலாளர் ஜெகதை செய்யது  வரவேற்பு நிகழ்த்தினார்

 மாவட்ட துணை நிர்வாகிகள்  முன்னிலை வகித்தனர்
இதில் 
மாவட்ட அணி நிர்வாகிகள் ஒன்றிய நகர பேரூர் மற்றும் கிளை நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

இந்நிகழ்வில்  சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மாநில பொதுச்செயலாளர் ஜெ.ஹாஜாகனி அவர்களும்  தமுமுக தலைமை பிரதிநிதி மண்டலம் ஜெய்னுல் ஆப்தீன் அவர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளராக அரசர்குளம் ஜகுபர் அலி அவர்களும் மாவட்ட பொருளாளராக அறந்தாங்கி நூர் முகமது அவர்களும் ஏகமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் புதுக்கோட்டை ( கிழக்கு ) மாவட்டம் பொதுக்குழு தீர்மாணங்கள் : 

1 ) தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் கோரிக்கையை ஏற்று நீண்டநாள் முஸ்விம் சிறைவாசிகளுக்கு பரோல் வழங்கியும் மேலும் சிறைவாசிகளுக்கு நீடுமன்றத்தின் மூலம் பினை வழங்கிய தமிழக அரசுக்கு தமுமுக சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறோம் . 

2 ) புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி தாலுகா அரசு மருத்துவமனையில் மருத்துவர் பற்றாக்குறை மற்றும் உயிர்காக்கும் மருந்துகள் இல்லாததால் பொதுமக்களுக்கு கடுமையான சிரமமும் உயிரிழப்பும் ஏற்படுகிறது . எனவே சுகாதார துறை உடனடியாக தேவையான மருத்துவர்களை நியமிக்க வேண்டும் . என கேட்டுக்கொள்கிறோம் . 

3 ) 14.01.2024 அன்று அம்மாபட்டினத்தை சேர்ந்த NM யூனுஸ் அவர்களின் மகன் அப்சர் என்ற 8 வயது சிறுவனை பாம்பு கடித்ததால் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை வழங்காத காரணத்தால் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார்.எனவே தமிழக அரசு உயிரிழந்த சிறுவனின் குடும்பத்திற்கு ரூபாய் -10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம் . 

4 ) ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி நிர்வாகம் எந்த வித அடிப்படை வசதிகளையும் செய்யாமல் அந்த பகுதி மக்கள் வாழ்வதற்கே தகுதியற்ற நிலையில் உள்ளது.அனைத்து ஊர்களிலும் எந்த வித சாலை வசதியும் இல்லாமல் குன்றும் குழியுமாக உள்ளது.ஊர்முழுவதும் குப்பைமேடாக காட்சியளிக்கிறது . ஊராட்சி நிர்வாகதில் முறையாக வரவு செலவு கணக்குகள் இல்லாமல் ஊழல் மலிந்து உள்ளதால் மாவட்ட நிர்வாகம் முறையாக வரவு செலவினை தணிக்கை செய்யவும் ஊழல் செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் கேட்டுக்கோள்கிறோம் . 

 5 ) கோட்டைப்பட்டினதில் இருந்து திருச்சி செல்வதற்கு இரண்டு அரசு பேருந்துகள் வந்து கொண்டிருந்த நிலையில் வெளியூர் செல்லும் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது . கடந்த இரண்டு மாதங்களாக பேருந்து நிறுத்தப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர் . எனவே நிறுத்தப்பட்டுள்ள பேருந்து சேவை உடனடியாக தொடங்கப்பட கேட்டுக்கொள்கிறோம் .

6 ) கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் இளைஞர்களின் வாழ்வினை சீரழிக்கும் கஞ்சா போன்ற போதை பொருட்களின் புழக்கம் அதிகளவில் உள்ளது . இதனால் பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் சிறுவர்கள் கூட போதை பழக்கத்திற்கு அடிமையாகும் நிலை உள்ளது . எனவே தமிழக அரசு இதனை இரும்பு கரம் கொண்டு தடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் . 

7 ) கோட்டைப்பட்டினம் பகுதியில் நாட்டுப்படகு மீனவர்கள் மீன் பிடித்து கொண்டிருக்கும் போது விசைப்படகு மீனவர்கள் நாட்டுப்படகு மீனவர்களின் வலையை பிய்த்து சேதமாக்குவதும் , விசைப்படகை கொண்டு நாட்டுப்படகில் மோதி விபத்தை ஏற்படுத்துவதும் தொடர்கதையாக உள்ளது . இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் விசைப்படகு மீது உரிய நடவடிக்கை எடுத்து உரிமத்தை ரத்து செய்யவும் மானிய டீசலை நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம் . 

8 ) அறந்தாங்கி நகராட்சி பகுதியில் தெருநாய்களின் தொல்லை அதிகமாக உள்ளது . தெருநாய்கள் குழந்தைகளையும் , ஆடு , மாடுகளையும் கடிக்கும் ஆபத்து உள்ளதால் நகராட்சி நிர்வாகம் தெருநாய்களை அப்புறப்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் . 

9 ) அறந்தாங்கி நகராட்சி குடியுறுப்பு பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமகா உள்ளதால் , நகராட்சி நிர்வாகம் உடனடியாக சாலைகளை  சரிசெய்ய வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம் . 

10 ) ஆலங்குடி தாலுக கேவிக்கோட்டை கிராமத்தில் கடைஎண் 6601 அரசு மதுபானக்கடை அரசு உயர்நிலை பள்ளிக்கு அருகில் உள்ளது . மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுத்து மதுபானகடையை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம் .

 11 ) மீமிசல் ஆரம்ப சுகாதார நிலையம் தரம் உயர்தப்பட்டு 24 மணி நேரமும் மருத்துவர்கள் பணிபுரியவும் , பிரவத்திற்கு தனி வார்டு அமைத்து மருத்துவரை நியமிக்க நடவடிகை எடுக்க வேண்டுமாய் ப் கேட்டுக்கொள்கிறோம் . 

12 ) மீமிசலை தலையிடமாக கொண்டு , மீமிசல் , நாட்டாணி புரசக்குடி வெளிவயல் பொன்னமங்களம் ஆகிய ஊரட்சிகளை ஒருங்கினைத்து பேரூராட்சியாக தரம் உயர்த்த வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம் .
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments