பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பயணிகள் நிழற்குடை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது




பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் பயணிகள் நிழற்குடை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை
பேருந்து நிலையத்தில் பயணிகள் நிழற்குடை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை நகரில் உள்ள பஸ் நிலையம் கடந்த 1986-ம் ஆண்டு கட்டப்பட்டது.

இங்கிருந்து தஞ்சை, திருச்சி, ராமநாதபுரம், ராமேஸ்வரம், கும்பகோணம், மன்னார்குடி,
முத்துப்பேட்டை,  வேதாரண்யம், திருத்துறைப்பூண்டி, அதிராம்பட்டினம், புதுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, மதுரை, பேராவூரணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சுற்றி ஏராளமான கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் இருந்து பல்வேறு தேவைகளுக்காக பொதுமக்கள் பட்டுக்கோட்டை நகருக்கு வருகின்றனர். பட்டுக்கோட்டை நகரில் தற்போதுள்ள பஸ் நிலையத்திற்கு நாள்தோறும் 450 பஸ்கள் வந்து செல்கின்றன

இந்நிலையில் மக்களின் நிழலுக்காக  பட்டுக்கோட்டை
பேருந்து நிலையத்தில் நகராட்சி சார்பில் பயணிகள் நிழற்குடை புதிதாக அமைக்கப்பட்டுள்ளது
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments