தஞ்சாவூர் - திருவாரூர் - நாகப்பட்டினம் இருவழிச்சாலை பணிகள் பிப்.15க்குள் நிறைவடையும் - மத்திய அரசின் குறைதீர் ஆணையம் தகவல்




தஞ்சை நாகை இருவழிச் சாலை அமைக்கும் பணிகள் பிப்ரவரி15ம் தேதிக்குள் நிறை வடையும் என்று மத்திய அரசின் குறைதீர் ஆணையம் தெரிவித் துள்ளது.

2015ம் ஆண்டு தொடங்கப் பட்ட தஞ்சை நாகை இடை யேயான 77 கி.மீ தொலைவு இருவழிச்சாலை அமைக்கும் பணிகள் 2017ம் ஆண்டு டிசம் பரில் நிறைவடைய வேண்டும்
ஆனால் 26 கீலோ மீட்டர் மட்டுமே நிறை வடைந்த நிலையில் 2017ம் ஆண்டு செப்டம்பர் முதல் எந்த பணிகளும் நடக்கவில்லை. 

இதையடுத்து 2019ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் தஞ்சை நாகை சாலை தொடர்பாக நாகை நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் பயணிகள் சங்க செயலர் அரவித்த்குமார் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. 

இது தொடர்பாக ஒரு மாதத்திற்குள் உரிய மேல் நடவடிக்கை மேற்கொள்ள கோர்ட் உத்தரவிட்டது.

இதனடிப்படையில் பழைய ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு, புதிய ஒப்பந்தம் கோரப்பட்டு 2021ம் ஆண்டு மே மாதம் பணிகள் தொடங்கப்பட்டன. 

2023ம் ஆண்டு மே மாதம் பணிகள் ஆனால் பல்வேறு காரணங்களால் காலநீட்டிப்பு வழங்கப் பட்டது.
 
இப்பணிகளை விரைந்து முடிக்கவும். இருவழி சாலை பணிகள் நிறைவடைவதற்கு முன்பு புதிய சாலையிலுள்ள இணைப்பு சாலைகளில் உரிய வேகத்தடைகள் மற்றும் சாலை யோர தடுப்புகள் அமைக்கவும்

மத்தியஅரசின் குறைதீர் ஆணைய இணையதளத்தில் அரவிந்த்கு மார் சார்பில் புகார் அளிக்கப் பட்டது.

இது குறித்து புகாருக்கு குறை நீர் ஆணையம் அளித்த பதிலில், தஞ்சை நாகை இருவழி சாலைப்பணிகள் பிப்ரவரி5ம் தேதிக்குள் நிறைவடையும். இணைப்பு சாலைகளில் வேகத் தடைகள், சாலையோர தடுப்பு கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments