கோபாலப்பட்டிணத்திலா? ஆர். புதுப்பட்டிணத்திலா? காவல்துறை பாதுகாப்புடன் நடந்த நாட்டாணிபுரசக்குடி ஊராட்சி கிராமசபை கூட்டம்! பிடிஓ, ஊராட்சி செயலாளருக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்!!
மீமிசல் அருகே நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட ஆர்.புதுப்பட்டினத்தில் காவல்துறை பாதுகாப்புடன் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டம் புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட ஆர்.புதுப்பட்டினம் மற்றும் கோபாலபட்டிணத்தில் நடைபெறும் என இரண்டு துண்டு பிரசுரம் அடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு தெரிவிக்கப்பட்டது. 2 இடங்களில் எப்படி கூட்டம் நடத்தலாம் என்று கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோட்டைப்பட்டினம் டிஎஸ்பி கவுதம் தலைமையில் சப்இன்ஸ்பெக்டர்கள் முத்துமணி, ராஜாராம் உட்பட ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். 

கூட்டத்துக்கு ஊராட்சி தலைவர் சீதாலட்சுமி தலைமை வகித்தார். பிடிஒ சிவகாமி, ஆகியோர் முன்னிலை வகித்தனர் கூட்டம் தொடங்கியதும், ஊராட்சி தலைவர் அனுமதியின்றி கிராமசபை கூட்டம் 2 ஊர்களில் நடப்பதாக துண்டு பிரசுரம் விநியோகம் செய்த ஊராட்சி செயலாளர் ராஜ்குமார், அதற்கு உடந்தையாக இருந்த வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகாமி ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்தனர். 

அதைத்தொடர்ந்து இருவர் மீதும் துறை ரீதியான விசாரணை நடத்தக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.


மேலும், ஊராட்சி தலைவர் மீது தெரிவிக்கப்பட்ட நிதி முறைகேடு புகார் உள்ளிட்ட 3 குற்றச்சாட்டுகளுக்கு உரிய  மறுவிசாரணை நடத்தக்கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 

கூட்டம் தொடங்கியது முதல் முடிவடையும் வரை வாக்குவாதம் தொடர்ந்ததால் பரபரப்பு நிலவியது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments