தொண்டி அருகே முட்புதருக்குள் தலைகுப்புற கவிழ்ந்த கார்; 5 பேர் படுகாயம்
தொண்டி அருகே முட்புதருக்குள் கார் தலைகுப்புற கவிழ்ந்த விபத்தில் 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

தலைகுப்புற கவிழ்ந்தது

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினர் நேற்று முன்தினம் நள்ளிரவு மதுரையில் இருந்து ஒரு காரில் ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை நோக்கி வந்து கொண்டிருந்தனர். இவர்கள் வந்த கார் திருவாடானை தாலுகா தொண்டி அருகே உள்ள பழையனக்கோட்டை கிராமத்தின் அருகில் சென்று கொண்டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

மேலும் அங்கிருந்த பாலத்தின் கீழ் காட்டுகருவேல மர புதருக்குள் பாய்ந்து தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒரு பெண், 2 குழந்தைகள் உள்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

போலீசார் விசாரணை

அப்போது அந்த வழியாக சென்றவர்கள் கார் விபத்தில் சிக்கியதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் உடனடியாக காரில் சிக்கியவர்களை கிராம மக்களின் ஒத்துழைப்போடு மீட்டு தொண்டி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த ெதாண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments