புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் குரூப்-4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு 8-ந் தேதி தொடக்கம்
தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 2024-ம் ஆண்டிற்கான குரூப்-4 போட்டி தேர்வு வருகிற ஜூன் மாதம் 9-ந் தேதி நடைபெறுகிறது. மேற்படி தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 28-ந் தேதி ஆகும். குரூப்-4 தேர்வுக்கான இலவச நேரடி பயிற்சி வகுப்புகள் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய வளாகத்தில் வருகிற 8-ந் தேதி தொடங்குகிறது. இப்பயிற்சியின் போது இலவச பாடக்குறிப்புகள் வழங்கப்படும். ஒவ்வொரு வாரமும் மேற்படி தேர்வுக்கான மாதிரி தேர்வுகள் நடத்தப்படும். இத்தேர்வுக்கு தயாராகி கொண்டிருப்பவர்கள் நேரடி பயிற்சி வகுப்புகளில் சேர்ந்து கொள்ள தங்களது 2 பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் ஆதார் அட்டை நகலுடன் வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரிலோ அல்லது 043322 222287 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments