கோபாலப்பட்டிணத்தில் GPM மக்கள் மேடை மற்றும் GPM மீடியா இணைந்து நடத்திய வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றும் முகாம்!




கோபாலப்பட்டிணத்தில் GPM மக்கள் மேடை மற்றும் GPM மீடியா இணைந்து வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்த்தல், திருத்தம் மற்றும் முகவரி மாற்றும் முகாம் நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணி புரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் GPM மக்கள் மேடை மற்றும் GPM மீடியா இணைந்து வாக்காளர் பட்டியலில் புதிய பெயர் சேர்த்தல்,திருத்தம் மற்றும் முகவரி மாற்ற முகாம் 07-02-2024 புதன்கிழமை காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை பெரிய பள்ளிவாசல் வளாகத்தில்  நடைபெற்றது.

இதில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இளைஞர்கள், இளம்பெண்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர்.

இதேபோல பட்டியலில் பெயர் திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் பூத் மாற்றம் போன்ற திருத்தங்களுக்கு விண்ணப்பித்தனர்.

இந்த சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 20 நபர்களும், திருத்தம், முகவரி மாற்றம் மற்றும் வாக்குச்சாவடி மாற்றம் ஆகியவற்றிற்கு 20 நபர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா என 100-க்கும் மேற்பட்டோர் நபர்கள் கலந்து கொண்டு பயணடைந்தனர்.






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments