அதிராம்பட்டினம் ரெயில் நிலையத்தில் லட்ச ரூபாய் செலவில் கட்டப்பட்டு திறக்கப்படாமல் சேதமடைந்து வரும் கழிவறை கட்டிடத்தை விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அகல ரெயில் பாதை
அதிராம்பட்டினம் வழியாக திருவாரூர்- காரைக்குடிக்கு ரெயில் இயக்கப்பட்டது. இந்த ரெயில் சேவை கடந்த 16 ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டது. இதனை மீண்டும் தொடங்கக்கோரி பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து மீட்டர் கேஜ் ெரயில் பாதை அகற்றப்பட்டு அகல ரெயில் பாதை அமைக்கப்பட்டது.
இதில் திருவாரூர்-காரைக்குடி இடையே உள்ள அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் ரெயில் நிலையங்கள் புதுப்பிக்கப்பட்டது. அனைத்து பணிகளும் முடிந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு திருவாரூர்- காரைக்குடி இடையே ரெயில் சேவை தொடங்கப்பட்டது.
பூட்டிக்கிடக்கும் கழிவறை கட்டிடம்
வாரம் ஒருமுறை செக்கந்திராபாத் - ராமேஸ்வரம் இடையிலான சிறப்பு ெரயில் அதிராம்பட்டினம் வழியாக சென்று வருகிறது. அதேபோல் வாரந்தோறும் எர்ணாகுளம்-வேளாங்கண்ணி இடையே சிறப்புரெயிலும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் ஏராளமான பயணிகள் பல்வேறு இடங்களுக்கு சென்று வருகின்றனர்
வருகிறார்கள்.
இந்த நிலையில் அதிராம்பட்டினம் ரெயில் நிலையத்தில் பயணிகள் வசதிக்காக கட்டப்பட்ட கட்டண கழிவறை பயன்பாட்டிற்கு வராமல் பூட்டியே கிடக்கிறது. இதனால், பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பெண்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
லட்சக்கணக்கான ரூபாய் செலவில் கட்டப்பட்ட கழிவறை கட்டிடம் பயன்பாட்டிற்கு வராமலேயே சேதமடைந்து உள்ளதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
நடவடிக்கை எடுக்க கோரிக்கை
மேலும் ரெயில் நிலையத்தில் குடிநீர் குழாய்கள் முறையான பராமரிப்பு இல்லாத காரணத்தால் மக்களால் பயன்படுத்தப்பட முடியாத நிலையில் இருக்கிறது. எனவே கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் சேதமடைந்து வரும் கழிவறை கட்டிடத்தை சீரமைத்து விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு விட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் குடிநீர் குழாய்களை சீரமைத்து சுகாதாரமாக குடிநீர் வழங்க வேண்டும் என பயணிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Newe Source : Dailythanthi
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.