மீமிசலில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் அங்காடி கட்டி டம் கட்ட எம்எல்ஏ ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்.




ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் சத்திரம்பட்டி கிராமத்தில் ரூ.16 லட்சம் மதிப்பீட்டில் அங்காடி கட்டி டம் கட்ட எம்எல்ஏ ராமச்சந்திரன் அடிக்கல் நாட்டினார்.

புதுக் கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அடுத்த ஆவுடையார் கோவில் தாலுகா கிழக்கு கடற்கரை சாலையில் அமைந்துள்ள மீமிசல் சத்திரம்பட்டினம் கிராம மக்களின் குடும்ப அட்டைகளுக்கு அரிசி, ஜீனி பொருள் கள் வழங்கும் அங்காடி வாடகை கட்டிடத்தில் இயங்கி வருகிறது.

இதையடுத்து அங் காடி கட்டிடம் புதிதாக அமைக்க வேண்டும் அப்பகுதி பொது மக்கள் அறந்தாங்கி எம் எல்ஏ ராமச்சந்திரனிடம் கோரிக்கை வைத்தனர்.

இதையடுத்து பொது மக்களின் கோரிக்கையை ஏற்ற அறந்தாங்கி எம்எல்ஏ நேற்று சத்திரம்பட்டி கிரா மத்தில் 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய அங் காடி கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டினார்.

அதன் பின்னர் அதே பகுதியில் சுமார் 50 வரு டங்களுக்கு முன் கட் டப்பட்ட கட்டிடத்தில் கால்நடை மருத்துவமனை செயல் பட்டுவருகிறது. இதன் அருகே கால்நடை மருத்துவமணை செயல்பட புதிய கட்டிடம் பயன்பாட் டிற்கு கொண்டுவராமல் உள்ளது. அதை அறந்தாங்கி எம்எல்ஏ ஆய்வு செய்து விரைவில் புதிதாக கட்டப் பட்டு உள்ள கட்டிடத்தை திறந்து அதில் கால்நடை மருத்துவமணை இயங்க நடவடிக்கை எடுக்கப்ப டும் என கூறினார்.

நிகழ்ச்சியில் ஆவுடை யார்கோவில் வட்டார காங்கிரஸ் தலைவர் கூடலூர் முத்து,ஒன்றிய குழு உறுப்பினர் அய்யா ரமேஷ். ஊராட்சி மன்ற தலைவர் செல்வம் உள் ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments