மணமேல்குடி பகுதியில் கடற்சார் படிப்புடன் கூடிய புதிய அரசு பொறியியல் கல்லூரி(Government Engineering College) அமைக்க வேண்டும் - அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமச்சந்திரன் உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் நேரில் சந்தித்து கோரிக்கை
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கடற்கரை பகுதியான  மணமேல்குடி பகுதியில்  கடற்சார் படிப்புடன் கூடிய புதிய அரசு பொறியியல் கல்லூரி(Government Engineering College) அமைக்க வேண்டும்  - அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமச்சந்திரன் உயர்கல்வித்துறை அமைச்சர்  ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன்  நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்துள்ளார் 

(12.2.24) திங்கட்கிழமை மாண்புமிகு தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர்  ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் அவர்களை நேரில் சந்தித்து 

அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி உறுப்பினர் ராமச்சந்திரன் MLA அவர்களின் கோரிக்கையை ஏற்று அறந்தாங்கி அரசு கலைக் கல்லூரிக்கு 24 வகுப்பறைகள் கட்டவும், அறந்தாங்கிதொழில்நுட்பக் கல்லூரிக்கு 5 வகுப்பறைகள் கட்டவும் (ரூ.10.74 கோடி) ஆணை பிறப்பிக்கப்பட்டதற்கு அறந்தாங்கி தொகுதி மக்கள் சார்பாக நன்றி தெரிவித்தார்கள்.            

மேலும் அறந்தாங்கிகலைக் கல்லூரிக்கு  சுற்றுச்சுவர் அமைக்க  வேண்டும்என்ற கோரிக்கை விடுத்தார் 

அறந்தாங்கி தொகுதியில் மணமேல்குடி பகுதியில்  கடற்சார் படிப்புடன் கூடிய புதிய அரசுபொறியியல் கல்லூரி (Government Engineering College) ஒன்றினையும்  அமைத்து தரவேண்டும் என்ற கோரிக்கையை  வலியுறுத்தினார்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments