கடற்பசு பாதுகாப்பு மேம்பாட்டு பயிற்சி




தமிழ்நாடு வனத்துறை சார்பில், புதுக்கோட்டை வனக்கோட்டம், அறந்தாங்கி வனச்சரகம் இணைந்து மணமேல்குடியில் கடற்பசு பாதுகாப்பு குறித்து துறைகளுக்கிடையேயான ஒருங்கிணைப்பு மற்றும் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட வன அலுவலர் கணேசலிங்கம் தலைமை தாங்கினார். அறந்தாங்கி வனச்சரக அலுவலர் மணிவெங்கடேஷ், மீன்வளத்துறை சார் ஆய்வாளர் கனகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கடற் பசு மற்றும் கடல் தாழைகளின் முக்கியத்துவத்தையும், அவற்றிற்கான அச்சுறுத்தல்களையும் கலந்தாலோசிக்கப்பட்டது. பாக் ஜலசந்தியில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் முதல் புதுக்கோட்டை மாவட்டம் அம்மாபட்டினம் வரை உள்ள கடல்பகுதி தமிழக அரசால் 2022-ம் ஆண்டு கடற்பசு பாதுகாப்பகமாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து தமிழ்நாடு வனத்துறையால் புதுக்கோட்டை மாவட்டத்தில் 42.8 கி.மீ. நீள கடற்கரையில் உள்ள மீனவ கிராமங்களுக்கு மாலை நேரத்தில் நேரில் சென்று அழிந்து வரும் கடல்வாழ் உயிரினங்களான கடற்பசு, கடல் ஆமை, கடல் அட்டை மற்றும் இன்னும் பிற அரிய உயிரினங்களை அழிவிலிருந்து பாதுகாக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மணமேல்குடி ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளா நடேசன், புதுக்கோட்டை மாவட்ட மீனவ கிராமங்களின் தலைவர்கள், மீனவ சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments