18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் அதிகாரிகள் தகவல்




18 வயது பூர்த்தியடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

விழிப்புணர்வு முகாம்

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்கான முன்னேற்பாடு பணிகளை தேர்தல் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்திலும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் செயல்பாடுகள் பற்றி அரசு அலுவலகங்கள் மற்றும் பொது இடங்களில் வாகனங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

கடந்த முறை வாக்குப்பதிவு குறைவாக இருந்த இடங்களை கண்டறிந்து அந்த இடங்களில் கூடுதல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இதில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்படுகிறது.

விண்ணப்ப படிவம்

இந்த நிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியான பின்பும் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் தங்களது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘‘நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் உள்ளதா? இல்லையா? என்பதை வாக்காளர்கள் கேட்டு அறிந்து கொள்ளலாம். மேலும் 18 வயது பூா்த்தியடைந்தவர்கள் ஆர்.டி.ஓ. அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்களில் வாக்காளர் விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து கொடுக்கலாம். மேலும் ஆன்லைன் மூலம் https://voters.eci.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். voter helpline செயலியை பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் சந்தேகங்கள் எதுவும் இருந்தால் 1950 என்ற தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டு கேட்கலாம்'' என்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments