நிலங்கள் அளவீடுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் தகவல்



நிலங்கள் அளவீடுக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் கூறியுள்ளார்.

விண்ணப்பிக்கலாம்


தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையதளத்தை நிக் மூலம் உருவாக்கியுள்ளது. அதில் நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையவழியில் விண்ணப்பிக்கும் புதிய வசதி கடந்த ஆண்டு (2023) நவம்பர் மாதம் 20-ந் தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

இப்புதிய சேவையின் மூலம் பொதுமக்கள் நிலஅளவை செய்ய எந்நேரத்திலும் எவ்விடத்திலிருந்தும் நிலஅளவை கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களை செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல் இணைய வழியிலேயே விண்ணப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இணையவழி சேவையின்...

நிலஅளவை செய்யப்படும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது செல்போன் வாயிலாக தெரிவிக்கப்படும். மேலும் நிலஅளவை செய்யப்பட்ட பின்னர் மனுதாரர் மற்றும் நிலஅளவையர் கையொப்பமிட்ட அறிக்கை, வரைபடம் ஆகியவற்றை https://.eservices.tn.gov.in/ என்ற இணையவழி சேவையின் மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளும் வகையில் நிலஅளவையரால் பதிவேற்றம் செய்யப்படும்.

எனவே பொதுமக்கள் அனைவரும் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கலெக்டர் மெர்சி ரம்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments