அறந்தாங்கியில் மாணவர்களுடன் கலந்துரையாடி உணவு சாப்பிட்ட போலீஸ் சூப்பிரண்டு




`உங்களைத் தேடி உங்கள் ஊரில்' எனும் திட்டத்தில் அறந்தாங்கி பகுதியில் கலெக்டர் மெர்சி ரம்யா நேற்று ஆய்வு மேற்கொண்டார். இதேபோல மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டேவும் சென்றிருந்தார். அறந்தாங்கி அருகே சிலட்டூர் தொடக்கப்பள்ளிக்கு சென்ற போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே, அங்கிருந்த மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது மதிய நேரத்தில் பள்ளியில் மாணவர்களுக்கு சத்துணவு திட்டத்தின்கீழ் மதிய உணவு வழங்கப்பட்டது. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து மதிய உணவை போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே சாப்பிட்டார். மேலும் சாப்பிட்டு கொண்டே மாணவர்களுடன் கலந்துரையாடினார். அப்போது மாணவ-மாணவிகளின் எதிர்கால லட்சியம் குறித்து கேட்டறிந்தார். இதில் ஒரு மாணவி தான் டாக்டர் ஆக வேண்டும் என லட்சியம் வைத்திருப்பதாக தெரிவித்தார். அதற்கு அந்த மாணவியிடம் எதற்காக டாக்டராக வேண்டும் என நினைக்கிறீர்கள் என கேட்டார். அதற்கு அந்த மாணவி, அடுத்தவர்களுக்கு உதவி செய்வதற்காக தெரிவித்தார். அதற்கு டாக்டர் ஆகாமல் போலீஸ் என வேறெந்த துறையிலும் மக்களுக்கு உதவி செய்யலாமே என்றார். இதற்கு அந்த மாணவி மருத்துவ சேவை செய்வதற்காக டாக்டர் ஆக விரும்புவதாக தெரிவித்தார். அந்த மாணவிக்கு போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே வாழ்த்து தெரிவித்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments