கோபாலப்பட்டிணம் ரஹ்மானிய்யா குர்ஆன் மதரஸா ஆண்டு விழா & ரஹ்மானியா பெண்கள் மதரஸா 25-வது ஆலிமா பட்டமளிப்பு விழா அழைப்பிதழ்!




கோபாலப்பட்டிணம் ரஹ்மானிய்யா குர்ஆன் மதரஸா ஆண்டு விழாவும் மற்றும் ரஹ்மானியா பெண்கள் மதரஸா 25-வது ஆலிமா பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் 29/03/2024 வியாழக்கிழமை கோபாலப்பட்டிணம் ரஹ்மானிய்யா குர்ஆன் மதரஸா ஆண்டு விழாவும், 01/03/2024 வெள்ளிக்கிழமை ரஹ்மானிய்யா பெண்கள் மத்ரஸாவின் பட்டமளிப்பு விழாவும், மஃரிப் தொழுகைக்கு பின் பயான் நிகழ்ச்சியும், பரிசளிப்பு விழாவும், 02/03/2024 சனிக்கிழமை ரஹ்மானிய்யா பெண்கள் மதரஸாவில் பெண்களுக்கான நிகழ்ச்சி நடைபெற உள்ளது.  

குறிப்பு:29.02.2024 வியாழக்கிழமை இஷாவிற்குப்பின் நடைபெறும் மதரஸாவின் முன்னாள், இந்நாள் நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், மதரஸாவின் வளர்ச்சிக்காக உடலாலும், பொருளாலும் உதவி செய்தவர்கள், செய்து கொண்டு இருப்பவர்கள் அனைவருடைய ஹக்கிலும் துஆ செய்யப்படும். மஜ்லிஸில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம். மனிதன் கல்விக்காக செய்கின்ற தர்மம் அவன் மரணித்த பிறகும் நன்மையை பொழியும். (அல் ஹதீஸ்)

கீழ்கானும் நிகழ்ச்சி நிரலில் கண்டுள்ளவாறு நடைபெற உள்ளது.

ஆலிமா பட்டமளிப்பு விழா 01-03-2024 வெள்ளிக்கிழமை காலை 9.00 மணியளவில் ஜும்ஆ பள்ளிவாசல் வளாகத்தில் தலைவர்கள், நிர்வாகிகள் மற்றும் முஸ்லிம் ஜமாஅத்தார்கள் தலைமையில், மெளலவி ஹாஃபிழ், R.ஷாஹுல் ஹமீது அல்குத்ஸி அவர்கள் கிராஅத் ஓத, கோபாலப்பட்டிணம் ஹிப்ழு மதரஸா ஆசிரியர் மௌலவி ஹாஃபிழ்.A.ரியாழ் முஹம்மது அல்குத்ஸி அவர்கள் இஸ்லாமிய கீதம் பாட, கோபாலப்பட்டிணம் பெரிய பள்ளிவாசல் இமாம் மெளலவி, ஹாஃபிழ் பாஜில் S.S. ஹாஜா ரஜபுத்தீன் மன்பா அவர்கள் நிகழ்ச்சியினை தொகுத்து வழங்க, தொண்டி, M.R.பட்டினம், அல் அஸ்ஹரிய்யா அரபுக் கல்லூரி முதல்வர் மௌலானா மௌலவி ஹாஃபிழ் H.முஹம்மது ஜலாலுத்தீன் அன்வாரி அவர்கள் ஸனது வழங்கி சிறப்பு பேருரை நிகழ்த்த உள்ளார்கள்.

மேலும் மணமேல்குடி அன்னை கதீஜா கல்லூரி அரபுத்துறை பேராசிரியர் மெளலவி ஹாஃபிழ்.M.சையது அபுதாஹிர் தாவூதி அவர்கள் பேச்சுப்போட்டி நடுவராக பங்கேற்கிறார்.

மெளலானா மௌலவி அல்ஹாஜ் N.M.A.இக்பால் பாகவி ஹரத் அவர்கள், மெளலவி ஹாஃபிழ், M.S.கலீலுர் ரஹ்மான் ஸிராஜி அவர்கள் பேராசிரியர், அரபுத்துறை, அன்னை கதீஜா காலேஜ், மணமேல்குடி, மெளலானா,மெளலவி.J.உஸ்மான் அலி நாஃபிஈ ஹஜிரத் அவர்கள் இமாம், அவுலியா நகர் பள்ளிவாசல், கோபாலப்பட்டிணம், மெளலானா,மெளலவி M.S.முஹம்மது ஃபிர்தவ்ஸ் உலவி அவர்கள் இமாம், கடற்கரை பள்ளிவாசல், கோபாலப்பட்டிணம், மெளலானா, மௌலவி A.ராஜா முஹம்மது மஸ்லஹி அவர்கள் துணை இமாம், காட்டுக்குளம் பள்ளிவாசல், கோபாலப்பட்டிணம், மௌலானா.ஹாபிழ், F.ஹாஜா அலாவுதீன் வாஹிதி அவர்கள் இமாம், ஜூம்ஆ பள்ளிவாசல், மீமிசல். மௌலானா, அல்ஹாஜ் K.முஹம்மது அப்துல்லாஹ் மன்பஈ அவர்கள், மௌலானா.அல்ஹாஜ் A.சாதிக் ஹுஸைன் ரஹ்மானி அத்ரமி அவர்கள், மௌலானா, அல்ஹாஜ், R.M.A.R.ஹபீப் முஹம்மது ரஹ்மானி அத்ரமி அவர்கள், மௌலானா ஹாபிழ் S.முஜீப் ரஹ்மான் ரஷாதி அவர்கள், மெளலானா மெளலவி S.ஜகுபர் சாதிக் முனீரி அவர்கள், கோபாலப்பட்டிணம். ஆகியோர் வாழ்த்துரை வழங்க உள்ளனர்.

அதைத்தொடர்ந்து 01-03-2024 வெள்ளிக்கிழமை மஃரிப் தொழுகைக்குப் பின் பெரிய பள்ளிவாசல் வளாகத்தில் தோப்புத்துறை ஜாமிஆ மஸ்ஜித் தலைமை இமாம் மௌலானா மௌலவி,ஹாபிழ், K.M.ஷாஹுல் ஹமீது பாகவி ஹழ்ரத் அவர்கள் சிறப்பு பயான் நிகழ்த்த உள்ளார்.

ஹாஜி.M.M.N.ஜாபர் சாதிக் அவர்கள், தொழில் அதிபர், புருனை., ஹாஜி.Y.M.பாட்சா (பாதுஷா) அவர்கள், தொழில் அதிபர், புருனை., ஜனாப் M.K.R.முகமது காசிம் அவர்கள் தொழில் அதிபர், மலேசியா., ஜனாப் E.சாகுல் ஹமீது அவர்கள், இந்தியன் சூப்பர் மார்கெட், இந்தியன் ஜவுளி ஸ்டோர்,ஆவுடையார்கோவில், ஜனாப்.M.செய்யது அபுதாஹிர் அவர்கள் சென்னை சில்க்ஸ், மீமிசல்., ஜனாப்.M.சேக் மைதீன் அவர்கள்.எவரெஸ்ட் ஜவுளி ஸ்டோர், மீமிசல் ஆகியோர் பரிசுகளை வழங்குகின்றனர்.

ஜனாப். S.R.M.J. முஹம்மது பிர்தௌஸ் M.A.,M.Phil., அவர்கள், நன்றியுரை நிகழ்த்துகிறார்.

மதரஸா சந்தா வசூல் செய்பவர்: ஜனாப்.A.அமீர் அவர்கள், கோபாலப்பட்டிணம்., கணக்காளர்: ஜனாப்.M.அக்பர்தீன் அவர்கள், கோபாலப்பட்டிணம்.

02/03/2024 சனிக்கிழமை ரஹ்மானிய்யா பெண்கள் மதரஸா, நூருல் அய்ன் வளாகத்தில் பெண்களுக்கான நிகழ்ச்சி நடைபெறும்.  

நிஸ்வான் மதரஸா ஆலிமாக்கள்: K.கலந்தர் பாத்திமா ஆலிமா, J.ஜான்ஸ் பீவி ஆலிமா, H.பர்சிதா பர்வின் ஆலிமா

நிஸ்வான் மதரஸா நிர்வாகிகள்: ஜனாபா.S.ஹாஜிரா அம்மாள் அவர்கள், கோபாலப்பட்டிணம்., ஜனாபா.B.நஜ்மா அவர்கள், கோபாலப்பட்டிணம்.

நோட்டீஸ் அன்பளிப்பு: ஜனாப்.M.K.R.முகமது மீராசா அவர்கள், ராசி டிரேடர்ஸ், ஸ்டேட் பேங்க் அருகில், மீமிசல்.

மேல்காணும் நிகழ்ச்சி நிரலில் கண்டுள்ளவாறு நடைபெற உள்ளதால் சுற்று வட்டார பகுதி அனைத்து ஜமாத்தார்கள், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவரும் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்து தர அன்புடன் அழைக்கப்படுகிறார்கள். 
 
அழைப்பின் மகிழ்வில்... 
கோபாலப்பட்டிணம் ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் ஜமாஅத் பொதுமக்கள்.






எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments