மணமேல்குடி ஒன்றியத்தில் மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா




மணமேல்குடி ஒன்றியத்தில்  மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் வழிகாட்டுதலின்படி  மணமேல்குடி வட்டார வள மையத்தில் மன்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழாவினை மதிப்புக்குரிய அறந்தாங்கி  மாவட்ட கல்வி அலுவலர் இடைநிலை  ராஜேஸ்வரி  மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் தொடக்கநிலை  திரு சண்முகம் ஆகியோர் தலைமையில் தொடங்கியது.

இவ்விழாவில் மாவட்ட உதவி திட்ட அலுவலர்  ஜெயந்தி  வட்டார கல்வி அலுவலர்கள் செழியன் , இந்திராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்

 வட்டார வளமைய மேற்பார்வையாளர் பொறுப்பு  சிவயோகம் அனைவரையும் வரவேற்று பேசினார். 

இந்நிகழ்வில் மாவட்ட கல்வி அலுவலர்கள் மாணவர்களிடத்தில் ஒவ்வொரு மாணவர்களும் போட்டிகளில் பங்கேற்க வேண்டும் அதேபோல் தொடர்ந்து முயற்சி செய்து மாவட்ட அளவில் மாநில அளவிலும் வெற்றி பெற்று சாதனை படைக்க வேண்டும் என்றும், முயன்றால் முடியாதது எதுவுமில்லை., தொடர்ந்து நமது செயல்பாடுகளில் முயற்சித்து கொண்டே இருக்க வேண்டும்.  வெற்றி பெறுவது முக்கியம் எனில் நாம் முதலில் போட்டியில் பங்கேற்க வேண்டும் என்ற சிந்தனையை அனைத்து மாணவர்களும்
வளர்த்துக் கொள்ள வேண்டும் என்றும், மேலும் வெற்றி பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்து கொண்டார்கள்.

இந்நிகழ்வில் மாவட்ட உதவி திட்ட அலுவலர் அவர்கள் மாணவர்களிடத்தில் மன்ற போட்டிகள் குறித்த விரிவான தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள்.

இவ்விழாவில் மன்ற போட்டிகளில் முதல் பருவம் மற்றும் இரண்டாம் பருவத்தில் நடைபெற்ற இலக்கிய மன்றத்தில்  பேச்சுப்போட்டி கவிதை போட்டி கட்டுரை போட்டி மற்றும் வானவில் மன்றம்  அறிவியல் செயல் திட்டம் வினாடி வினா சிறார் திரைப்படம் ஆகிய  போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்  மற்றும் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் ஆசிரியர் பயிற்றுநர் திரு முத்துராமன் நன்றி கூறினார். 

ஆசிரியர்  இளங்கோவடிகள் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்வில் ஆசிரியர் பயிற்றுநர்கள் வேல்சாமி , அங்கையற்கண்ணி இல்லம் தேடிக் கல்வி ஒருங்கிணைப்பாளர்  கண்ணன் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் , மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.












எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments