ஏம்பக்கோட்டை மதரஸா ரஹுமா பரக்கத் மக்தப் & மகளிர் அரபிக் கல்லூரி ஆண்டு விழா அழைப்பிதழ்!



ஏம்பக்கோட்டை மதரஸா ரஹுமா பரக்கத் மக்தப் & மகளிர் அரபிக் கல்லூரியின் முதலாம் ஆண்டு முபல்லிகா & ஹாபிழா சகீரா, இரண்டாம் ஆண்டு காரிஆ, மூன்றாம் ஆண்டு முஅல்லமா பட்டமளிப்பு விழா, நான்காம் ஆண்டு மதரஸா ஆண்டு விழா வருகிற பிப்.24,25 (சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், மீமிசல் அருகே உள்ள ஏம்பக்கோட்டை மதரஸா ரஹுமா பரக்கத் மக்தப் மதரஸா ஆண்டு விழா 24.02.2024 சனிக்கிழமை முதல் அமர்வு காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை மாணவ, மாணவியரின் கிராஅத், பயான், ஹதீஸ், கேள்வி-பதில், துஆக்கள் நிகழ்ச்சி மஸ்ஜித் தாருஸ்ஸலாம் ஜூம்ஆ பள்ளிவாசல் ரஹுமா பரக்கத் மதரஸா வளாகத்தில் நடைபெற உள்ளது.

இரண்டாம் அமர்வாக பெண்கள் மட்டும் கலந்து கொள்ளக்கூடிய நிகழ்வு மாலை 3.00 மணி முதல் மக்ரிபு வரை முபல்லிகா, முஅல்லமா, காரிஆ சனது பெரும் மாணவிகளின் கிராஅத், பயான் மற்றும் கருத்தரங்கம் மஸ்ஜித் தாருஸ்ஸலாம் ஜூம்ஆ பள்ளிவாசல் ரஹுமா பரக்கத் மதரஸா வளாகத்தில் நடைபெற உள்ளது.

இரண்டாம் நாள் அமர்வாக 25.02.2024 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி முதல் 12.00 மணி வரை மஸ்ஜித் தாருஸ்ஸலாம் ஜூம்ஆ பள்ளிவாசலில் முபல்லிகா, முஅல்லமா, காரிஆ, ஹாபிழா சகீரா பட்டமளிப்பு விழா மதரஸா நிறுவனர் N.S.அயூப்கான் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.

இந்நிகழ்வில் மதுரை மாத்தூர் ஜாமிஆ இஹ்ஸானுல் உம்யான் பார்வையற்றோர் மதரஸாவின் முதல்வர் மௌலவி S.முஹம்மது ஷகீல் தாவூதி அவர்கள் சனது வழங்கி சிறப்புப் பேருரை நிகழ்த்த உள்ளார்.

இந்த ரஹுமா பரக்கத் மக்தப் & மகளிர் அரபிக் கல்லூரி ஆண்டு விழாவிற்கு சுற்று வட்டார பகுதி அனைத்து ஜமாத்தார்கள், இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் இஸ்லாமிய சொந்தங்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்து தருமாறு ரஹுமா பரக்கத் கல்வி அறக்கட்டளை சார்பில் அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.

கீழ்கண்டவாறு நிகழ்ச்சி நிரல் நடைபெற உள்ளது.





எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments