திருவோணம் புதிய தாலுகாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைத்தார். 35 ஆண்டுக்கால கோரிக்கை நிறைவேறியதால் எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.
35 ஆண்டுகால கோரிக்கை நிறைவேற்றம்
தஞ்சை மாவட்டம் திருவோணம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வருவாய்த்துறை சம்பந்தமான சான்றுகள் மற்றும் பிற சேவைகளை அலைச்சல் இன்றி எளிதில் பெறும் வகையில் திருவோணத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய தாலுகா அமைத்து தர வேண்டும் என்று கடந்த 35 ஆண்டுகளாக அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்த கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், திருவோணத்தை தலைமை இடமாகக் கொண்டு புதிய தாலுகா உருவாக்கப்படும் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
இதனையடுத்து மயிலாடுதுறையில் நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் புதிதாக உருவாக்கப்பட்ட திருவோணம் தாலுகாவை காணொலிக்காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து திருவோணம் திருமேனி நாதர்கோவில் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள திருவோணம் தாலுகா தற்காலிக அலுவலகத்தில் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் எம்.பி., தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப், எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், கா.அண்ணாத்துரை, என்.அசோக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ., கே.டி.மகேஷ் கிருஷ்ணசாமி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷாபுண்ணியமூர்த்தி, திருவோணம் ஒன்றியக்குழு தலைவர் செல்லம் சவுந்தர்ராஜன், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ, திருவோணம் தாசில்தார் முருகவேல், ஒரத்தநாடு தாசில்தார் சுந்தரசெல்வி உள்ளிட்டோர் குத்துவிளக்கு ஏற்றினர்.
இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
இந்த நிகழ்ச்சியில் திருவோணம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் சோம.கண்ணப்பன், காவாலிப்பட்டி ஒன்றியக்குழு உறுப்பினர் டி.தியாகராஜன், ஊராட்சி மன்ற தலைவர் பிச்சைக்கண்ணு, வடதெரு நாட்டார்கள் மற்றும் கிராம பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக திருவோணம் புதிய தாலுகாவை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்ததை முன்னிட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடப்பட்டது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.