தொண்டி, உப்பூர் , திருப்பாலைக்குடி , தேவிப்பட்டினம், இராமநாதபுரம், கீழக்கரை, ஏர்வாடி, சாயல்குடி வழியாக ராமநாதபுரம் மாவட்ட கிழக்கு கடற்கரை சாலையில் புதிய ரயில் பாதை அமைக்க வேண்டும் இராமநாதபுரம் மக்களவை தொகுதி உறுப்பினர் நவாஸ்கனி எம்.பி., கோரிக்கை






ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் ரயில் சேவை கிடைக்கும் வகையில் கிழக்கு கடற்கரை சாலையில் புதிய ரயில் பாதை திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்த வேண்டும் என நவாஸ்கனி எம்.பி., கோரிக்கை விடுத்துள்ளார்.

அம்ரித் பாரத் திட்டத்தில் ரயில் நிலைய மேம்பாடு, ரயில் பாலம், உள்ளிட்ட ரூ. 41 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் பணிகள் துவங்க அடிக்கல் நாட்டும் விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார். இந் நிகழ்ச்சி ராமநாதபுரம் ரயில்நிலையத்தில் காணொலி காட்சியாக ஒலிபரப்பு செய்யப்பட்டது.

இதில் பங்கேற்ற நவாஸ்கனி எம்.பி., பேசியதாவது:

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரயில்வே வளர்ச்சி திட்டப்பணிகளுக்காக தொடர்ந்து மத்திய அரசையும், ரயில்வே துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை வலியுறுத்தி வருகிறேன்.

ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை வழியாக ரயில் பாதை உள்ளது.

அதே போல் காரைக்குடியில் இருந்து துாத்துக்குடிக்கு கிழக்கு கடற்கரை சாலை வழியாக ரயில் இயக்கினால் காரைக்குடி, தொண்டி, ராமநாதபுரம், கீழக்கரை, ஏர்வாடி, சாயல்குடி உள்ளிட்ட பகுதி மக்கள் பயனடைவார்கள்.

ராமநாதபுரம் மாவட்டத்திற்கும் முழுமையாக ரயில் சேவை கிடைக்கும். வர்த்தகர்கள் பயன் பெறுவார்கள். கொரோனாவுக்கு முன் ரயில்கள் நின்று சென்ற நிலையங்களில் தற்போது நிற்பதில்லை என்ற புகாரும் உள்ளது. இதனையும் மத்திய அரசு சரி செய்ய வேண்டும்.

பகல் நேரத்தில் ராமநாதபுரத்தில் இருந்து சென்னைக்கு ரயில்கள் இயக்கப்பட வேண்டும் என்றார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments