நாடாளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படைகள், போலீஸ் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு கலெக்டர் தலைமையில் நடைபெற்றது




நாடாளுமன்ற தேர்தலையொட்டி பறக்கும் படைகள், போலீஸ் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது.

பயிற்சி வகுப்பு

நாடாளுமன்ற தேர்தலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்தல் பணிகளை நேர்மையாகவும், நியாயமாகவும் மேற்கொள்ள ஏதுவாக, மாவட்டத்தில் மொத்தமுள்ள 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் 18 பறக்கும் படைகள், 18 நிலையான கண்காணிப்பு குழுக்கள் மற்றும் 6 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் ஆகியவற்றை அமைத்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டரால் உத்தரவிடப்பட்டிருந்தது.

மேற்படி அமைக்கப்பட்ட குழுவில் இடம்பெற்றுள்ள அலுவலர்கள் மற்றும் போலீஸ் அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா தலைமையில் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது.

பறிமுதல் செய்யப்படுவது

இந்த பயிற்சி வகுப்பில், தேர்தலை நேர்மையாகவும், நியாயமாகவும் நடத்தும்பொருட்டு தேர்தல் ஆணையம் வழங்கியுள்ள விதிமுறைகள், அறிவுரைகள் மற்றும் தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் ஆகியவை குறித்தும், தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பாக புகார்களை தெரிவிக்க தேர்தல் ஆணையத்தால் உருவாக்கப்பட்டுள்ள cVIGIL செயலி மற்றும் தேர்தலின்போது சட்ட விரோதமாக செய்யப்படும் பணபரிமாற்றங்களை பறிமுதல் செய்யப்படுவது குறித்த பதிவுகள் மேற்கொள்ளும் ESMS செயலி ஆகியவற்றை பயன்படுத்துவது குறித்தும் பயிற்சி வழங்கப்பட்டது.

நிகழ்வில், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) வெங்கடாசலம், தனி தாசில்தார் (தேர்தல்) சோனை கருப்பையா மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments