பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் ரூ.7 கோடியில் சரக்கு முனையம் பிரதமர் நரேந்திரமோடி காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்




பட்டுக்கோட்டை ெரயில் நிலையத்தில் ரூ.7 கோடியில் சரக்கு முனையத்தை பிரதமர் நரேந்திரமோடி காணொலிக்காட்சி மூலம் திறந்து வைத்தார்.

சரக்கு முனையம்

பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் ரூ.7 கோடி செலவில் கட்டப்பட்ட சரக்கு கிடங்கை (சரக்கு முனையம்) காணொலிக்காட்சி மூலம் பிரதமர் நரேந்திரமோடி நேற்று காலை திறந்து வைத்தார்.

இதையொட்டி பட்டுக்கோட்டை ரெயில் நிலையத்தில் நடந்த திறப்பு விழா நிகழ்ச்சியில் திருச்சி சீனியர் டிவிஷனல் பாதுகாப்பு அதிகாரி சரவணன், அண்ணாதுரை எம்.எல்.ஏ. , நகர்மன்ற தலைவர் சண்முகப்பிரியா செந்தில் குமார், ஐகோர்ட்டு வக்கீல் முரளி கணேஷ், ரெயில்வே பாதுகாப்பு படை இன்ஸ்பெக்டர் தீபக்பாபீர்வால், ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். விழாவில் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன.

கம்பன் விரைவு ரெயில்

முன்னதாக பட்டுக்கோட்டை வட்ட ரெயில் பயணிகள் நல சங்கத் தலைவர் ஜெயராமன், திருச்சி சீனியர் டிவிஷனல் பாதுகாப்பு அதிகாரி சரவணனிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

சென்னை எழும்பூரில் இருந்து காரைக்குடிக்கு கம்பன் விரைவு ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும். அதிராம்பட்டினம், பேராவூரணி ரெயில் நிலையங்களில் நடை மேடையை நீட்டித்து, தாம்பரம்- செங்கோட்டை ரெயிலை மீண்டும் இயக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments