மீமிசல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் புதிய கட்டிடம் திறப்பு




மீமிசல் ஆரம்ப சுகாதார நிலையத்தில் புறநோயாளிகள் புதிய கட்டிடம் திறக்கப்பட்டது 

மீமிசல் ஆரம்ப சுகாதார நிலையம்   புதுக்கோட்டை மாவட்டம்  ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் ஊராட்சிக்குட்பட்ட  மீமிசலில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் இயங்கி வருகிறது. மீமிசல் கிராமம் சுற்றி பல கிராமங்கள் உள்ளன மீமிசல் நகரம் வளர்ந்து வரும் ஊராக விளங்கி வருகிறது 

இங்கு மீமிசல் மட்டுமின்றி சுற்றுவட்டாரா பகுதியை சேர்ந்த மக்களும் சிகிச்சைக்கு வருகின்றனர். தற்போது வெளிப்புற நோயாளிகள் பிரிவு புதிய கட்டிடம் பணிகள் நிறைவுற்று 12-03-2024 செவ்வாய்க்கிழமை  ஆரம்ப சுகாதார நிலையத்தில் 60 லட்சம் மதிப்பீட்டில் புறநோயாளிகள் புதிய  கட்டிடத்தை ஆவுடையார் கோவில் ஒன்றிய குழு தலைவர் உமாதேவி தலைமையேற்று திறந்து வைத்து குத்துவிளக்கு  ஏற்றினார்

இதில் ஊராட்சி நிர்வாகிகள், மருத்துவர்கள், செவிலியர்கள், அரசு அதிகாரிகள்,  பொதுமக்கள் கலந்து கொண்டனர் 

இது குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது

தற்போது உள்ள பழைய கட்டிடம் வார்டு கட்டிமாகவும் புதிய கட்டிடம் நேயாளிகள் பிரிவு கட்டிமாக செயல்படும் என்றார் 

மீமிசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்த வேண்டும் : எம்எல்ஏ ராமச்சந்திரன் கோரிக்கை

மீமிசல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனை அல்லது அவசர கால சிகிச்சை பிரிவு மருத்துவமனையாகவோ தரம் உயர்த்த வேண்டும் என தமிழக அரசுக்கு அறந்தாங்கி எம்எல்ஏ டி.ராமச்சந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை அரசு மருத்துவமனையாகவோ அல்லது அவசர கால சிகிச்சை பிரிவு மருத்துவமனையாகவோ தரம் தரம் உயர்த்தினால் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன்பெறுவர். எனவே, இம்மருத்துவமனையை அரசு மருத்துவமனையாகவோ அல்லது அவசர கால சிகிச்சை பிரிவு மருத்துவமனையாகவோ தரம் உயர்த்த கோரிக்கை விடுத்துள்ளார். இக்கோரிக்கையை தாமதமின்றி நிறைவேற்ற வேண்டும் என தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்களுக்கு மனு அனுப்பியுள்ளார்.








எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments