அதிரை அருகே லாரி-கார் நேருக்கு நேர் மோதி விபத்து..!




தஞ்சை மாவட்டம்,அதிராம்பட்டினம் அடுத்த ராஜாமடம் அருகே லாரியும், காரும் மோதி விபத்து.

அறந்தாங்கியில் இருந்து திருத்துறைப்பூண்டி நோக்கி சென்று கொண்டிருந்த லாரியும்,நாகப்பட்டினத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்று கொண்டிருந்த காரும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் காரின் முன்பக்கம் நொறுங்கி சுக்கு நூறாகியது.அதிர்ஷ்டவசமாக வாகனத்தில் சென்றவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

விபத்து அறிந்த அக்கம்பக்கத்தினர் வாகனத்தில் இருந்தவர்களை மீட்டு முதலுதவி செய்தனர்.இச்சம்பவத்தால் கிழக்கு கடற்கரை சாலைப்பகுதியில் பரபரப்புடன் காணப்பட்டது.







எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments