மணமேல்குடி தாலுகா, செல்லனேந்தல் கிராமத்தில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம்




ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி, மணமேல்குடி தாலுகா, செல்லனேந்தல் கிராமத்தில் கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 2021 சட்டமன்ற தேர்தல்களில் 50 சதவீதம் குறைவான வாக்கு பதிவானது. இதைத்தொடர்ந்து வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 100 சதவீதம் வாக்குப்பதிவு பெற வேண்டும் என்ற நோக்கத்தில் வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதற்கு தேர்தல் துணை தாசில்தார் முத்துக்கனி, மண்டல துணை தாசில்தார் முருகேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். தொடர்ந்து செல்லனேந்தல் கிராமத்திற்குட்பட்ட அனைத்து வாக்காளர்களின் வீடுகளுக்கும் ஊர்வலமாக சென்று தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் வருவாய்த்துறை அலுவலர்கள், வாக்குச்சாவடி அலுவலர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments