சேதுபாவாசத்திரம் அருகே புதுப்பட்டினம் கடற்கரை சுற்றுலா தலத்தை மேம்படுத்த திட்டம் அசோக்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு




சேதுபாவாசத்திரம் அருகே புதுப்பட்டினம் கடற்கரை சுற்றுலா தலத்தை மேம்படுத்தும் திட்டத்தை அசோக்குமார் எம்.எல்.ஏ. ஆய்வு செய்தார்.

புதுப்பட்டினம் கடற்கரை

சேதுபாவாசத்திரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையோரம் உள்ள புதுப்பட்டினம் கடற்கரை பகுதி மக்களின் சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது. பட்டுக்கோட்டை, பேராவூரணி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள், தங்கள் பொழுதை கழிக்க, இந்த கடற்கரையை பயன்படுத்தி வருகின்றனர்.

ஆய்வு

இதனால் வாகன நெரிசல் ஏற்பட்டு வருவதால் இந்த கடற்கரையை சுற்றுலா தலமாக மேம்படுத்த, கடற்கரைக்கு செல்லும் வகையில் தற்போதுள்ள சாலையையும், வாகனங்கள் வெளியேறுவதற்கான மாற்றுச் சாலையை உருவாக்கும் நோக்கத்தோடு புதிய சாலை அமைப்பதற்கான இடத்தையும், குடிநீர், கழிப்பறை, குளியல் அறை, உடைமாற்றும் அறை, மின்விளக்கு, பாதுகாப்பு வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்து அசோக்குமார் எம்.எல்.ஏ., சேதுபாவாசத்திரம் ஒன்றியக்குழு தலைவர் மு.கி.முத்துமாணிக்கம், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

இதில் மாவட்ட சுற்றுலாத்துறை அலுவலர் சங்கர், மீன் வளத்துறை உதவி இயக்குனர் மணிகண்டன், மீன் துறை ஆய்வாளர் கெங்கேஸ்வரி, வனச்சரக அலுவலர் சந்திரசேகர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாகேந்திரன், சடையப்பன் மற்றும் பல்வேறு அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

புதிய வகுப்பறை கட்டிடம்

திருச்சிற்றம்பலம் அருகே உள்ள பாலத்தளி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிதாக வகுப்பறை கட்டிடம் ரூ.32 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவில் அசோக்குமார் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு அடிக்கல் நாட்டி கட்டுமான பணிகளை தொடங்கி வைத்தார். இதில் மாவட்ட கவுன்சிலர் அலிவலம் மூர்த்தி, வட்டாரக் கல்வி அலுவலர் அங்கயற்கண்ணி, ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஆல்பர்ட் குணாநிதி, ஒன்றியக்குழு உறுப்பினர் நவநீதம் ஆறுமுகம், ஊராட்சி மன்றத்தலைவர் விஜயா சுப்பிரமணியன், பள்ளி தலைமையாசிரியர் மீனாம்பிகை, மாவட்ட தி.மு.க. மருத்துவரணி அமைப்பாளர் டாக்டர்.சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து மணவயல் கிராமத்தில் புதியசாலை மற்றும் மயான சாலை சிறு பாலம் ஆகியவை ரூ. 10 லட்சத்து40 ஆயிரம் மதிப்பீட்டில் அமைக்கப்படுவதற்கான பணி, பூவாளூர் கிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம் ரூ.32 லட்சத்து60 ஆயிரம் மதிப்பீட்டில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா ஆகிய பணிகளையும் அசோக்குமார் எம். எல். ஏ. தொடங்கி வைத்தார்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments