தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு அட்டவணை முழு விவரம்






மக்களவைத் தேர்தல் அட்டவணை அறிவிப்பு.. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு!

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அறிவிப்பு

மக்களவைத் தேர்தலுடன், தமிழகத்தில் காலியாக உள்ள கன்னியாக்குமரி மாவட்டத்தின் விளவங்கோடு சட்டமன்ற தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும்

வாக்கு எண்ணிக்கை ஜூன் மாதம் 4ம் தேதி நடைபெறுகிறது

வேட்பு மனுத்தாக்கல் துவங்கும் நாள்:-  20.03.2024

வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள் 27.03.2024

வேட்பு மனுபரிசீலனை :- 28.03.2024

வேட்பு மனு திரும்பப் பெற கடைசி நாள்:-  30.03.2024

வாக்குப்பதிவு நாள்;-  19.04.2024

வாக்கு எண்ணிக்கை நாள் :- 04.06.2024




85 வயதை கடந்த முதியவர்கள் & மாற்றுத்திறனாளிகள் பிரிவில் 40% உடல் ஊனமுற்றவர்கள், வீட்டில் இருந்தே வாக்களிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 

இதர மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்குச் சாவடிகளில் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும்

முதல் தலைமுறை வாக்காளர்கள் 1.8 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். 

ஏப்ரல் 1ம் தேதி 18 வயதை 13.4 லட்சம் இளைஞர்கள் அடைய உள்ளதால், அவர்களையும் வாக்காளர்களாக இணைக்கப்பட்டுள்ளார்கள்

நாடு முழுவதும் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 96.88 கோடி பேர் வாக்களிக்க உள்ளனர். 

ஆண் வாக்காளர்கள் 49.7 கோடி பேரும், பெண் வாக்காளர்கள் 47.1 கோடி பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 48,044 பேரும் உள்ளனர்.

மக்களவை தேர்தலுடன் ஆந்திரா, சிக்கம், அருணாச்சல், ஒடிசா, ஜம்மு-காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கும் சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் என தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் தெரிவித்துள்ளார்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments