ஆவுடையார் கோவில் -- காரைக்குடி இடையே புதிய வழித்தடத்தில் புதிய பேருந்து இயக்கம்




ஆவுடையார் கோவில் -- காரைக்குடி இடையே புதிய வழித்தடத்தில் புதிய பேருந்து இயக்கம்

நேற்று 16.03.2024  காரைக்குடியிலிருந்து  புதுவயல், செங்கரை, நால்ரோடு, காடங்குடி, சத்திரப்பட்டி, பழந்தாமரை, புண்ணியவயல் வழியாக ஆவுடையார்கோவில் வரை புதிதாக இயக்கப்பட்ட (தடம் எண் 920) புறநகர் பேருந்தை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் உயர்திரு S.மாங்குடி அவர்கள் காலை 08.00 மணிக்கு புதுவயல் பேருந்து நிலையத்தில் துவக்கிவைத்தார்.
ஆவுடையார்கோவில் பேருந்து நிலையம் வந்தடைந்த பேருந்தை திருப்பெருந்துறை ஊராட்சி மன்றத் தலைவர், ஊர் அம்பலம், திருவாகுடி ஊராட்சி மன்ற தலைவர், புண்ணியவயல் ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் பரந்தாமரை சத்திரப்பட்டி புண்ணியவயல் ஆவுடையார் கோவில் பேருந்து பயனாளர்கள் கலந்து கொண்டு பேருந்தை வரவேற்றனர்.

தினமும் பேருந்து புறப்படும் நேரம்: காரைக்குடி புறப்பாடு காலை 06.20 மணி

ஆவுடையார்கோவில் புறப்பாடு காலை 07.55 மணி

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments