4 நாடாளுமன்ற தொகுதிகள்
தொகுதி மறுசீரமைப்பின் போது கடந்த 2009-ம் ஆண்டு முதல் புதுக்கோட்டை நாடாளுமன்ற தொகுதி இல்லாமல் போனது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை (தனி), புதுக்கோட்டை, விராலிமலை, ஆலங்குடி, திருமயம், அறந்தாங்கி ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளையும் 4 நாடாளுமன்ற தொகுதிகளாக பிரிக்கப்பட்டது.
இதில் கந்தர்வகோட்டை, புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிகள் திருச்சி நாடாளுமன்ற தொகுதியிலும், விராலிமலை சட்டமன்ற தொகுதி கரூர் நாடாளுமன்ற தொகுதியிலும், ஆலங்குடி, திருமயம் சட்டமன்ற தொகுதிகள் சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியிலும், அறந்தாங்கி சட்டமன்ற தொகுதி ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியிலும் அடங்கும். இதனால் புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 நாடாளுமன்ற தொகுதிகளை உள்ளடக்கியதில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் கண்காணிக்கப்படுகின்றன.
தீவிர வாகன சோதனை
புதுக்கோட்டை மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி 18 பறக்கும் படையினரும், 18 நிலையான கண்காணிப்பு குழுவினரும், 6 வீடியோ கண்காணிப்பு குழுவினரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பிரத்தியேகமாக வாகனங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த வாகனங்களில் ஜி.பி.எஸ்.கருவி பொருத்தப்பட்டுள்ளது. இவர்களுடன் போலீசாரும் பாதுகாப்பு பணிக்கு செல்கின்றனர்.
இதில் அந்தந்த குழுவினர் நேற்று முன்தினம் மாலை முதல் தங்களது பணியை மேற்கொள்ள தொடங்கினர். இருப்பினும் நேற்று காலை முதல் பறக்கும்படையினரின் வாகன சோதனை தீவிரமானது. வாக்காளர்களுக்கு பணம் கொண்டு செல்லப்படுவதை தடுக்கவும், தேர்தல் விதிகளை மீறி பணம், பொருட்கள் கொண்டு செல்லப்படுவதை தடுக்கவும் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். மாவட்டத்தில் ஆங்காங்கே சாலையில் நின்று வாகனங்களை மறித்து சோதனையிட்டனர். இந்த வாகன சோதனையானது சுழற்சி முறையில் பறக்கும் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.