அரசியல் கட்சியினர் தேர்தல் பிரசார அனுமதிக்கு இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்தார்.
ஆலோசனை கூட்டம்
நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பு வெளியான நிலையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசியல் கட்சியினர் பின்பற்ற வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து கலெக்டர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான மெர்சி ரம்யா தலைமை தாங்கி பேசியதாவது:- நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிப்பான நேற்று முதல் (அதாவது நேற்று முன்தினம்) தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. தேர்தல் பிரசார களமாக பள்ளிவாசல், தேவாலயங்கள் மற்றும் கோவில் போன்ற வழிபாட்டு தலங்களை பயன்படுத்த கூடாது.
ஒத்துழைப்பு நல்க வேண்டும்
தேர்தல் கூட்டங்கள் நடைபெறும் இடம் நேரம் குறித்து உள்ளூர் காவல் துறை அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டு முன் அனுமதியும் பெறப்பட வேண்டும். தேர்தல் அமைதியாகவும் நேர்மையாகவும் நடைபெற தேர்தல் அதிகாரிகள் அனைவருக்கும் ஒத்துழைப்பை நல்க வேண்டும்.
ஒலிபெருக்கியை காலை 6 மணிக்கு முன்னரும், இரவு 10 மணிக்கு பின்னரும் ஓர் இடத்தில் வைத்தோ அல்லதுநகரும் வாகனங்களில் வைத்தோ பயன்படுத்த தடை செய்யப்பட்டுள்ளது. இரவு 10 மணிக்கு மேல் பொதுக்கூட்டங்கள் மற்றும் ஊர்வலங்கள் நடத்த பொதுவான தடை உள்ளது.
இணையதளத்தில்விண்ணப்பித்தல்
பிரசார கூட்டங்கள், பிரசாரத்திற்கு அனுமதி பெற கோரும் அரசியல் கட்சிகள், அரசியல் கட்சியின் பிரதிநிதிகள், தங்களது மனுக்களை 48 மணி நேரத்திற்கு முன்பு https://suvidha.eci.gov.in/loginஎன்ற இணையதள முகவரியில் விண்ணப்பம் தாக்கல் செய்திட வேண்டும். தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியபடி ரூ.50 ஆயிரத்திற்கு மேல் பணம் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. போலி செய்திகளை சமூகவலைத்தளங்களில் பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சியினர் தெரிவித்த கருத்துக்களில், சாதாரண வியாபாரிகள், சந்தைக்கு செல்பவர்கள் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் எடுத்து செல்ல அனுமதிக்க வேண்டும் என கோரினர். அதற்கு தேர்தல் ஆணைய உத்தரவுப்படி தான் செயல்பட வேண்டும் என கலெக்டர் தெரிவித்தார்.
4 தொகுதிகள்
மாவட்டத்தில் உள்ள6 சட்டமன்ற தொகுதிகளும் திருச்சி, கரூர், சிவகங்கை, ராமநாதபுரம் என 4 நாடாளுமன்ற தொகுதிகளில் பிரிந்துள்ள நிலையில், அங்குள்ள தேர்தல் அதிகாரிகளிடம் நமது மாவட்டத்தில் பிரசாரத்திற்கான அனுமதியை காலம் தாமதம் இல்லாமல் வழங்க எடுத்துரைக்க வேண்டும் என்றனர். கடந்த சட்டமன்ற தேர்தலின் போது புதுக்கோட்டையில் சத்தியமூர்த்தி சாலையில் உயர்கோபுர மின் விளக்குகளில் கட்சியின் சின்னம் இருப்பதாக கூறி, அதனை மறைத்தனர். அதுபோல தற்போதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க. கட்சி நிர்வாகி தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) முருகேசன், நேர்முக உதவியாளர் (தேர்தல்) வெங்கடாசலம், புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா உள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.