தேர்தல் புறக்கணிப்பு பதாகை எதிரொலி: ஆயிப்பட்டி பகுதியில் அதிகாரிகள் ஆய்வு




ஆலங்குடி தாலுகாவில் ஆயிப்பட்டி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஆயிப்பட்டியில் இருந்து மேலக்கோட்டை செல்லும் இணைப்பு சாலை இணைக்கப்படாமல் உள்ளது. இந்த சாலையை இணைக்க வலியுறுத்தி கடந்த 60 ஆண்டுகளுக்கு மேலாக கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அதிகாரிகளிடம் மனுக்களை கொடுத்துள்ளனர். ஆனால் இதனால் வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இணைப்பு சாலையை இணைக்காத மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக புதுக்கோட்டை-ஆலங்குடி சாலையில் ஆயிப்பட்டி கிராமத்திற்கு செல்லும் வளைவில் பொதுமக்கள் நேற்று முன்தினம் பதாகை வைத்தனர். இதையடுத்து நேற்று ஒன்றிய ஆணையர்கள், கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி மற்றும் குப்பகுடி ஊராட்சி மன்ற தலைவர் இளங்கோ, ஒன்றிய துணை ஆணையர்கள் ஆகியோர் இணைப்பு சாலையை ஆய்வு செய்தனர். பின்னர் ஆயிப்பட்டி பொதுமக்கள் மாவட்ட நிர்வாகம் சார்பில் உத்தரவாதம் அளித்தால் மட்டுமே பதாகை எடுப்போம். இல்லாவிட்டால் தேர்தல் புறக்கணிப்பு தான் என்று கூறினர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments