முகாம் விவரங்கள்:
நாள்: 13/12/2025 நாளை மறுநாள் (சனிக்கிழமை)
நேரம்: காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை
இடம்: ஆலங்குடி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம்.
நிறுவனங்கள் மற்றும் பணியிடங்கள்:
இம்முகாமில், தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த 100-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளன. இந்த நிறுவனங்கள் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியிடங்களுக்கு தகுதியுள்ள நபர்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.
மேலும், மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்களும் முகாமில் பங்கேற்று, இலவச திறன் பயிற்சிகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்ய உள்ளனர்.
பங்கேற்பதற்கான தகுதிகள்:
வயது வரம்பு: 18 முதல் 40 வயதிற்குட்பட்ட வேலைநாடும் இளைஞர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்கள்.
கல்வித் தகுதி: 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை, ஐ.டி.ஐ, டிப்ளமோ, பி.இ. மற்றும் நர்சிங் படிப்புகள் முடித்தவர்கள்.
கொண்டு வர வேண்டியவை:
வேலைநாடும் இளைஞர்கள் தங்களது சுயவிவரக் குறிப்பு (Resume), ஆதார் அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் கல்விச் சான்று நகல்களுடன் முகாமில் கலந்து கொண்டு பயனடையலாம் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.