திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் 100 சதவீதம் வாக்களிப்போம், தேர்தல் பருவம் தேசத்தின் பெருமிதம் என்ற வாசகம் அடங்கிய ராட்சத பலூனை கலெக்டர் மெர்சி ரம்யா பறக்கவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். பின்னர், துண்டுபிரசுரங்களை இளம் வாக்காளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அவர் வழங்கினார். இதில், "வாக்காளர் என்பதில் பெருமிதம் கொள்வோம். வாக்களிக்க தயாராவோம். வாக்குரிமை நமது பிறப்புரிமை. வாக்களிப்போம், ஏற்றம் பெற வாக்களிப்போம். ஜனநாயகம் தழைக்க வாக்களிப்போம். வலுவான ஜனநாயகத்துக்கு பெருமளவில் பங்கேற்று தவறாமல் வாக்களிப்போம். கண்ணியத்துடன் வாக்களிப்போம். உங்கள் எதிர்காலத்தின் குரல் உங்கள் வாக்கு. மனதில் உறுதி வேண்டும். ஓட்டுக்குப் பணம் பெற்றால் தண்டனை. ஒரு வருடம் ஜெயில். கையூட்டுப் பெற்று வாக்களிக்காமல் மனசாட்சிப்படி வாக்களியுங்கள், ஜனநாயகத்தை காத்திடுங்கள்'' போன்ற வாசகங்கள் அடங்கியிருந்தன. இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, நகராட்சி ஆணையர் ஷியாமளா, தாசில்தார் பரணி, வருவாய் ஆய்வாளர்கள் பரணிதரன், வித்யா, கிராம நிர்வாக அலுவலர் வசந்தகுமார் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.