ரூ.111 கோடி போதைப்பொருள் சிக்கிய சம்பவம்: இறால் பண்ணை உரிமையாளர் வெளிநாடு தப்பியோட்டமா? சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை




புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே இறால் பண்ணையில் மத்திய சுங்கத்துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சமீபத்தில் சோதனை நடத்தியதில் ஹாசிஸ் கஞ்சா எனப்படும் போதைப்பொருள் மற்றும் கஞ்சா பொட்டலங்கள் ரூ.111 கோடி அளவில் சிக்கியது. இதனை அதிகாரிகள் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவத்தில் இறால் பண்ணையின் உரிமையாளரான ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த சுல்தான் தலைமறைவாக உள்ளார். அவரை பிடிக்க சுங்கத்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் சுல்தானின் செல்போன் அணைத்து வைக்கப்பட்ட நிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர் இலங்கைக்கு தப்பிச்சென்றிருக்கலாம் அல்லது வெளிநாடு தப்பி சென்றிருக்கலாம் என சுங்கத்துறை அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர். இந்த வழக்கில் அவருடன் தொடர்புடைய மற்றொருவரையும் தேடி வருவதாகவும், அவரும் தலைமறைவாக இருப்பதாக சுங்கத்துறை வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர். அவரையும் பிடிக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments