வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்




வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது.

விழிப்புணர்வு ஊர்வலம்

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 19-ந் தேதி நடைபெற உள்ள நிலையில் தேர்தலில் வாக்களிப்பதன் அவசியம் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி புதுக்கோட்டையில் நேற்று விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. ஊர்வலத்தை மாவட்ட வருவாய் அதிகாரி செல்வி கொடியசைத்து தொடங்கி வைத்தார். ஊர்வலம் அண்ணாசிலையில் இருந்து கீழ ராஜ வீதி வழியாக நகர்மன்றத்தை சென்றடைந்தது. ஊர்வலத்தில் கல்லூரி மாணவ-மாணவிகள், பெண்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மூவர்ண நிறத்திலான பலூன்கள் பறக்கவிடப்பட்டன. இந்நிகழ்ச்சியில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, தாசில்தார் பரணி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கந்தர்வகோட்டை

கந்தர்வகோட்டை அருகே உள்ள புதுநகர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு தேர்தல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கந்தர்வகோட்டை தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஸ்ரீதர் தலைமை தாங்கினார். தாசில்தார் விஜயலட்சுமி, துணை தாசில்தார் பால்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து வாக்களிப்பதன் முக்கியத்துவம் குறித்து எடுத்து கூறப்பட்டது. இதில் புதுநகர் வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள், பெண்கள் ஆகியோர் வாக்களிப்பது குறித்து உறுதிமொழி எடுத்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ரேவதி செய்திருந்தார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments