மீமிசல் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்றவர் கைது ரூ.15 ஆயிரம், 2 செல்போன்கள் பறிமுதல்






புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் பகுதியில் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில், தனிப்படையினர் மீமிசல் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் அந்தோணி (வயது 43) என்பவர் கேரளா லாட்டரி சீட்டுகளை விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து ரூ.15 ஆயிரம், 2 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்து மீமிசல் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதுகுறித்து மீமிசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments