அடிப்படை வசதிகள் செய்து தராததால் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்க வாடிவாசல் கிராம மக்கள் முடிவு பேனர் வைத்ததால் பரபரப்பு




மணமேல்குடி தாலுகா காரக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட வாடிவாசல் பகுதியில் 60-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக சாலை, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அப்பகுதி மக்கள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதேபோல் விவசாய நிலங்களுக்கும், மயானத்திற்கும் செல்ல சாலை வசதி இல்லாததால் மழைக்காலங்களில் இறந்தவர்கள் உடலை விளை நிலங்கள் வழியாக எடுத்துச் செல்லக்கூடிய அவலநிலை உள்ளது.

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அதிருப்தி அடைந்த கிராம மக்கள் வருகிற நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கப்போவதாக பேனர் வைத்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments