அரசு பஸ் திருட்டு
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் அரசு போக்குவரத்து பணிமனை இயங்கி வருகிறது. இங்கு 67 பஸ்கள் உள்ளன. ஆனால் பஸ்களை நிறுத்த போதிய இட வசதி இல்லாததால் 12 பஸ்கள் பணிமனைக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்தநிலையில் திருவாடானை அரசு பஸ்சை மர்ம ஆசாமி திருடி சென்றான்.
இதுகுறித்து அறந்தாங்கி அரசு பணிமனை மேலாளர் மணிவண்ணன் அளித்த புகாரின் பேரில் அறந்தாங்கி போலீஸ் இன்ஸ்பெக்டர் கருணாகரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
விபத்து
இந்தநிலையில், திருட்டுப்போன அரசு பஸ் அறந்தாங்கி அருகே இ.சி.ஆர். ரோட்டில் டேங்கர் லாரி மீது விபத்துக்குள்ளாகி நிற்பதாக தகவல் கிடைத்தது. மேலும் அந்த பஸ்சின் முன்பக்கம் பலத்த சேதம் அடைந்து இருந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது அரசு பஸ்சை திருடி சென்றவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. பின்னர் அவரை போலீசார் மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளித்தனர்.
இதையடுத்து, போலீசார் அந்த அரசு பஸ்சை கைப்பற்றி ராமநாதபுரம் ஆர்.டி.ஓ.விடம் ஒப்படைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.