திருச்சி விமான நிலையத்தில் ரூ.13.61 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்




திருச்சி விமான நிலையத்தில் ரூ.13 லட்சத்து 61 ஆயிரம் வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

தங்கம் கடத்தல்

திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், துபாய், மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. சமீபகாலமாக வெளிநாடுகளில் இருந்து தங்கம் கடத்தி வரும் சம்பவம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

ேமலும் திருச்சியில் இருந்து வெளிநாடுகளுக்கு வெளிநாட்டு பணம் கடத்தப்படும் சம்பவமும் நடைபெற்று வருகிறது. இதை தடுக்க வான்நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் தங்கம் கடத்தலும், பணம் கடத்தலும் குறைந்தபாடில்லை.

இந்த நிலையில் நேற்று திருச்சி விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் துபாய் செல்ல தயாராக நின்று இருந்தது. இதனிடையே அந்த விமானத்தில் பயணம் செய்ய இருந்த பயணிகளின் உடைமைகளை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை செய்து கொண்டிருந்தனர்

வெளிநாட்டு பணம் பறிமுதல்

அப்போது, 2 பயணிகளின் நடவடிக்கையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனையடுத்து அவர்களது உடைமைகளை சோதனை செய்தபோது, அமெரிக்க டாலர் மற்றும் துபாய் திராம்ஸ் என வெளிநாட்டு பணத்தை கடத்த வைத்துஇருந்தது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் அந்த பணத்தை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட வெளிநாட்டு பணத்தின் மதிப்பு இந்திய ரூபாயில் 13 லட்சத்து 61 ஆயிரம் ஆகும். மேலும் தொடர்ந்து 2 பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments