இலங்கையில் அழகிய நகரம் : காத்தான்குடி




இலங்கையில் கிழக்கு மாகாண மட்டக்களப்பு மாவட்டத்தில் அழகிய நகரமான  காத்தான்குடி அமைந்துள்ளது 

இலங்கை முழுவதும் சுமார் 9.6 சதவீதமாக வாழும் இஸ்லாமியர்கள், கிழக்குப் பகுதியில் செறிந்து வாழ்கிறார்கள். அந்நாட்டில் இஸ்லாமியர்கள், தமிழர்களுக்கு (12.5%) அடுத்தபடியாக இரண்டாவது சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள். 

இங்கு வசிக்கும் இஸ்லாமிய மக்கள் பொதுவாக வர்த்தகத்தில் மட்டும் சிறந்து விளங்குவதாகவே பொதுவான கருத்து இருந்தாலும் விவசாயத்திலும் மீன்பிடிப்பிலும்கூட பெருந்தொகையான இஸ்லாமியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

ஒட்டுமொத்த இஸ்லாமிய மக்கள் தொகையில் 41.6 சதவீதம் பேர் விவசாயத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் 1.6 சதவீதம் பேர் அரசாங்கப் பணியில் இருப்பதாகவும் 2007ல் வெளிவந்த தனது புத்தகமொன்றில் ஆஸிப் ஹுசைன் குறிப்பிடுகிறார். மன்னார் மாவட்டம், பொலனறுவை, அனுராதபுரம், மொனராகலை ஆகிய பகுதிகளிலும் விவசாயத்தில் இஸ்லாமியர்கள் தீவிர ஆர்வம் காட்டுகிறார்கள்.

இலங்கை வட - கிழக்கு இஸ்லாமியர்கள்: வாழ்வும் பண்பாடும்
கொழும்பு, காத்தான்குடி போன்ற பகுதிகளில் வசிக்கும் இஸ்லாமியர்கள் முழுக்க, முழுக்க வர்த்தகத்தில்தான் ஈடுபட்டுள்ளனர். ஆனால், அம்பாறை போன்ற மாவட்டங்களில் பெருந்தொகையான இஸ்லாமியர்கள் விவசாயத்திலும் மீன்பிடியிலும் ஈடுபட்டுள்ளனர்.

காத்தான்குடி

காத்தான்குடி கிழக்கிலங்கையில் ஒரு நகரமாகும். தலை நகரான கொழும்பில் இருந்து 339 கிலோமீட்டர் தொலைவில் இந்நகரம் அமைந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் மத்தியில் அமையப்பெற்றுள்ள இந்நகரம் 2. 56 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பையும், 1.33 சதுர கிலோமீட்டர் நீர்ப்பரப்பையும் கொண்டுள்ளது. இந்நீர்ப்பரப்பானது மொத்த மாவட்ட நீர்ப்பரப்பில் 0.15% சதவீதமாகும்.

இங்கு இரண்டு தேசிய பாடசாலைகளும், எழுபதிற்கும் அதிகமான பள்ளிவாசல்களும் காணப்படுகின்றன.

காத்தான்குடியில் சினிமா தியேட்டர் மதுபான கடைகள் இல்லை














எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments