கலைப்போட்டிகள்
கலைத்துறையில் சிறந்து விளங்குகின்ற 17 வயது முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில் குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம், கிராமிய நடனம் மற்றும் ஓவியம் ஆகிய 5 பிரிவுகளில் மாவட்ட மற்றும் மாநில அளவிலான கலைப்போட்டிகள் தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத்துறையின் சார்பில் நடத்திட அரசு ஆணையிட்டுள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்ட அளவிலான போட்டிகள் நரிமேட்டில் உள்ள அரசு இசைப்பள்ளியில் வருகிற 9, 10-ந் தேதிகளில் காலை 10 மணி முதல் நடைபெறும்.
ஓவியம், கிராமிய நடனம்
இதில், ஓவியம் மற்றும் கிராமிய நடனம் 9-ந் தேதியும், குரலிசை, கருவியிசை, பரதநாட்டியம் 10-ந் தேதியும் நடைபெறுகிறது. குரலிசை போட்டியிலும், நாதசுரம், வயலின், வீணை, புல்லாங்குழல் போன்ற கருவி இசைப்போட்டியிலும், தாளக்கருவிகளான தவில், மிருதங்கம், கஞ்சிரா, கடம், மோர்சிங், பிரிவுகளிலும் இசையினை முறையாக பயின்றவர்கள் பங்கு பெறலாம். பரதநாட்டிய பிரிவில் ஒரு மார்கம் தெரிந்தவர்கள் பங்கு பெறலாம்.
கிராமிய நடனத்தில் கரகாட்டம், காவடியாட்டம், புரவியாட்டம், காளை ஆட்டம், மயிலாட்டம், மரக்கால் ஆட்டம், ஒயிலாட்டம், புலியாட்டம், தப்பாட்டம் (பறையாட்டம்), மலை மக்கள் நடனங்கள் போன்ற பாரம்பரிய கிராமிய நடனங்கள் அனுமதிக்கப்படும்.
அனைத்து போட்டிகளிலும் குழுவாக பங்கற்க அனுமதி இல்லை. அதிகபட்சம் 5 நிமிடம் நிகழ்ச்சி நடத்திட அனுமதிக்கப்படுவார்கள்.
ஓவியம்
ஓவியப்போட்டியில் பங்கேற்பவர்களுக்கான ஓவிய தாள்கள் வழங்கப்படும். அக்ரலிக் வண்ணம் மற்றும் நீர்வண்ணம் மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதனை பங்கேற்பாளர்கள் கொண்டுவர வேண்டும். நடுவர்களால் கொடுக்கப்படும் தலைப்பில் ஓவியங்கள் வரையப்பட வேண்டும். அதிகபட்சம் 3 மணி நேரம் அனுமதிக்கப்படுவார்கள்.
இப்போட்டிகளில் முதல் பரிசு ரூ.6 ஆயிரம், 2-ம் பரிசு ரூ.4,500, 3-ம் பரிசு ரூ.3,500 வழங்கப்படும். மாவட்ட போட்டியில் முதலிடம் பெறும் இளைஞர்கள் மாநில போட்டிக்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் விவரங்களுக்கு மாவட்ட அரசு இசைப்பள்ளியை 94861 52007, 99766 89383 ஆகிய செல்போன் எண்களில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.