ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரவுள்ளன சில மாற்றங்கள் என்ன என்ன முழு விவரம்




ஏப்ரல் 1 முதல் புதிய வரி முறையின் கீழ், ரூ. 7 லட்சம் வரை வரி செலுத்தக்கூடிய சம்பளம் உள்ளவர்கள் வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. 

ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கும் பிஎஃப் நடைமுறையின்படி இனி நீங்கள் வேறு நிறுவனத்துக்கு வேலை மாற்றம் செய்யும்போது பிஎஃப் தொகையை மாற்றக் கோர வேண்டியதில்லை. அது தானாகவே மாறிவிடும். 

ஏப்ரல் 1 முதல் உங்கள் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள ஃபாஸ்டாக் கணக்கின் KYC சரிபார்ப்பை வங்கியில் நீங்கள் புதுப்பிக்காமல் இருந்தால் மார்ச் 31க்குப் பிறகு KYC இல்லாத ஃபாஸ்டாக் கணக்கு வங்கியால் முடக்கப்படும். ஃபாஸ்டாக்கில் பேலன்ஸ் இருந்தாலும் பணம் செலுத்த முடியாது.

ஓலா செயலி:-

ஓலா செயலியில் இருக்கும் பணம் (Ola Money Wallet) சிறிய ப்ரீபெய்ட் கட்டணக் கருவியாக, அதாவது PPI ஆக மாற்றுவதாக அறிவித்துள்ளது. எனவே, வாடிக்கையாளர்கள் இனி அதிகபட்சமாக மாதம் ரூ.10,000 வரை அதில் பணத்தை வைத்துக்கொள்ளலாம்.

சிலிண்டர் விலை:-

ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் சமையல் சிலிண்டர் விலையில் மாற்றம் வருவது வழக்கம். அதன்படி, வருகிற ஏப்ரல் 1ஆம் தேதி புதிய சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படும். ஆனால், மக்களவைத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் விலையில் மாற்றம் செய்யப்பட வாய்ப்பில்லை. மார்ச் மாத விலையே நீடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

தேசிய பென்சன் திட்டம்:-

தேசிய ஓய்வூதியத் திட்டத்திற்கான பாதுகாப்பு விதிகள் மாற்றப்பட்டுள்ளன. இதில், நாம் இரண்டு அடுக்கு பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும். அதாவது, முன்பு போல் கடவுச் சொல்லை மட்டும் நிரப்பி உள்நுழைய முடியாது. எனவே, உங்களது கணக்கிற்கான அணுகல் வேறு ஒருவரின் கைகளுக்கு எளிதில் சென்றுவிடாது.நீங்கள் ஆதார் எண்ணைச் சரிபார்க்க வேண்டும். உங்கள் மொபைலுக்கு அனுப்பப்பட்ட ஓடிபி-ஐ பயன்படுத்த வேண்டும். பின்னர்தான் உங்கள் கணக்கு விவரங்களைப் பார்க்க முடியும்.

கிரெடிட் கார்டு:-

நீங்கள் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா (SBI) வங்கியின் கிரெடிட் கார்டை பயன்படுத்தினால் கண்டிப்பாக இந்த அப்டேட் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். ஏப்ரல் 1 முதல் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கி தனது கிரெடிட் கார்டு விதிகளில் பெரிய மாற்றங்களைச் செய்கிறது. வாடிக்கையாளர்கள் ஏப்ரல் 1ஆம் தேதிக்குப் பிறகு வாடகையைச் செலுத்தினால் அவர்களுக்கு ரிவார்டு பாயிண்ட்கள் கிடைக்காது. இந்த மாற்றம் சில கிரெடிட் கார்டுகளுக்கு ஏப்ரல் 15 முதல் பொருந்தும்.

புதிய வரி விதிப்பு முறை:-

புதிய வரி முறை ஏப்ரல் 1 முதல் இயல்புநிலை வரி அமைப்பாக மாறும் என்று கூறப்பட்டுள்ளது. அதாவது, நீங்கள் இதுவரை வரி தாக்கல் செய்யும் முறையைத் தேர்வு செய்யவில்லை என்றால், புதிய வரி முறையின் கீழ் வரி தாக்கல் செய்ய வேண்டும். 

புதிய வரி முறை

3 லட்சம் வரை - 0% 

3-6 லட்சம் - 5% 

6-9 லட்சம் - 10% 

9-12 லட்சம் - 15% 

12 முதல் 15 லட்சம் - 20% 

15 லட்சத்திற்கு மேல் வருமானம் - 30%

EPFO விதிமுறை:-

ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கும் புதிய நிதியாண்டில் பிஎஃப் திட்டத்தில் பெரிய மாற்றம் வருகிறது. இந்தப் புதிய விதியின்படி, நீங்கள் வேலை மாறினாலும் உங்களின் பழைய பிஎப் ஆட்டோ பயன்முறையில் மாற்றப்படும். அதாவது, இனி நீங்கள் வேலை மாற்றத்தின் போது பிஎஃப் தொகையை மாற்றக் கோர வேண்டியதில்லை. அது தானாகவே மாறிவிடும்

பாஸ்டாக்:-

உங்கள் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள ஃபாஸ்டாக் கணக்கின் KYC சரிபார்ப்பை வங்கியில் இருந்து நீங்கள் புதுப்பிக்கவில்லை என்றால் ஏப்ரல் 1 முதல்சிக்கலைச் சந்திக்க நேரிடலாம். இந்த வேலையை விரைவில் செய்து முடிக்க வேண்டும். ஏனெனில் மார்ச் 31க்குப் பிறகு KYC இல்லாத ஃபாஸ்டாக் கணக்கு வங்கியால் முடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்குப் பிறகு, ஃபாஸ்டாக்கில் பேலன்ஸ் இருந்தாலும் பணம் செலுத்த முடியாது.

கர்ப்பிணி பெண்களுக்கு ரூ.14000:-

தமிழக அரசு சார்ப்பில் டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டம் இதுவரை 5 தவணைகளாக வழங்கப்பட்ட நிதியுதவி இனிமேல் 3 தவணைகளாக வழங்கப்படும். 

அதன்படி, கர்ப்ப காலத்தின் நான்காவது மாதத்தில் ரூ.6000, குழந்தை பிறந்த நான்காவது மாதத்தில் ரூ.6000, குழந்தை பிறந்த 9 வது மாதத்தில் ரூ.2000 என வங்கி கணக்கில் வரவைக்கப்படவுள்ளது.விளம்பரம்மேலும், மூன்றாவது மற்றும் ஆறாவது மாதங்களில் இரு முறை ஊட்டச்சத்து பெட்டகங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SBI வருடாந்திர பராமரிப்பு கட்டணம் உயர்வு:-

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா க்ளாசிக், சில்வர், குளோபல், கான்டாக்ட்லெஸ் மற்றும் பிற வகை எஸ்பிஐ டெபிட் கார்டுகளுக்கான புதிய திருத்தப்பட்ட வருடாந்திர பராமரிப்பு கட்டணங்கள் ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் . 

வங்கி கணக்குகளுக்கான ஆண்டு பராமரிப்பு தொகையை எஸ்.பி.ஐ வங்கி வரும் ஏப்ரல் 1-ம் தேதி முதல் அதிகரிக்க உள்ளது. அதுமட்டுமல்லாமல் பல சேவைகளுக்கான கட்டணத்தொகையையும் அதிகரித்துள்ளது

 MSME நிறுவனங்களுக்கு பேமெண்ட்

பொதுத்துறை நிறுவனங்கள், பிற வெளி நிறுவனங்களுக்குத் தேவையான பல்வேறு பொருட்களையும், சேவைகளையும் ஒப்பந்த அடிப்படையில் அளிக்கிறது. அப்படி வழங்கப்படும் பொருட்களுக்கும், சேவைகளுக்கு ஒப்பந்ததாரர்கள் குறித்த காலத்திற்குள் பணத்தை வழங்குவதில்லை.

இதனால் MSME நிறுவனங்கள் கடும் நிதி நெருக்கடியை எதிர்கொண்டு வருகிறது, இது சிறிய பிரச்சனையாக இருந்தாலும் MSME நிறுவனங்களின் வளர்ச்சி முதல் கடனை திருப்பி செலுத்துவது வரையில் இதன் மூலம் பாதிக்கப்படுகிறது.இப்பிரச்சினைக்குத் தீர்வுகாணும் வகையில் எம்எஸ்எம்இ சட்டம் ( உதயம் திட்டம் ) திருத்தப்பட்டு, பொதுத்துறை நிறுவனங்கள் MSME நிறுவனங்களுக்குச் செலுத்த வேண்டிய நிலுவையில் உள்ள பில்களை 15 முதல் 45 நாட்களுக்குள் செலுத்த வேண்டும், இல்லையெனில் ஒப்பந்தம் கொடுத்த நிறுவனங்கள் கூடுதல் வரி செலுத்தும் முறை வருகிற ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலாக்கம் செய்யப்படுகிறது.

சுங்க கட்டணம் உயர்வு:-

தமிழகம் முழுவதும் 29 சுங்கச்சாவடிகளில் ஏப்ரல் 1ம் தேதி முதல் கட்டண உயர்வு அமலாவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது. 

பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச் சாவடிகளில் சுங்க கட்டணம்ஏப்ரல் 1 முதல் உயர்த்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோல் திண்டிவனம்-ஆத்தூர், போகலூர், புதுக்கோட்டை மாவட்டம் பூதக்குடி, சென்னசமுத்திரம், சிட்டம்பட்டி, எட்டூர் வட்டம், கணியூர், கப்பலூர், கீழ்குப்பம், கிருஷ்ணகிரி, லெம்பாலக்குடி, லெட்சுமணப்பட்டி, மாத்தூர், நெல்லூர், நாங்குநேரி, பெரும்புத்தூர், பள்ளிக்கொண்டா, பரனூர், பட்டரை பெரும்புதூர், புதுக்கோட்டை-வாகைகுளம், எஸ்வி புரம், சாலைபுதூர், செண்பகம்பேட்டை, சூரப்பட்டு, திருப்பாச்சேத்தி, வானகரம், வாணியம்பாடி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்ந்துள்ளது. 

அதேபோல் சென்னை புறநகரில் உள்ள பரனூர் மற்றும் ஆத்தூர் சுங்கச்சாவடிகளில் சுங்கக்கட்டணம் உயர்த்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments