புதுக்கோட்டை மாவட்டத்தில் 13,45,361 வாக்காளர்கள் புதிதாக 10,806 பேர் சேர்ப்பு




புதுக்கோட்டை மாவட்டத்தில் 13,45,361 வாக்காளர்கள் உள்ளனர். இதில் புதிதாக 10,806 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வாக்காளர் பட்டியல்

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் 22-ந் தேதி வாக்காளர் இறுதிபட்டியல் வெளியிடப்பட்டது. இதைத்தொடர்ந்து நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு வரை வாக்காளர் பட்டியலில் இடம்பெற விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இந்த படிவங்கள் பெறப்பட்டு கடந்த 27-ந் தேதியுடன் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 6 லட்சத்து 60 ஆயிரத்து 574 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 75 ஆயிரத்து 969 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர்கள் 62-ம் என மொத்தம் 13 லட்சத்து 36 ஆயிரத்து 605 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர்.

புதிதாக சேர்ப்பு

இதனைதொடர்ந்து வாக்காளர் பட்டியலில் இடம்பெற பலரும் விண்ணப்பித்தனர். இதில் புதிதாக 10 ஆயிரத்து 806 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். 2,050 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். கடந்த மார்ச் மாதம் 27-ந் தேதி வெளியான இறுதிபட்டியலில் புதுக்கோட்டை மாவட்டத்தில் 6 லட்சத்து 64 ஆயிரத்து 734 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 80 ஆயிரத்து 568 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 59 பேரும் என மொத்தம் 13 லட்சத்து 45 ஆயிரத்து 361 வாக்காளர்கள் உள்ளனர். இந்த பட்டியலில் உள்ள வாக்காளர்கள் தான் மொத்த வாக்காளர்கள் ஆவார்கள். இவர்கள் இந்த நாடாளுமன்ற தேர்தலில் வாக்களிக்க உள்ளனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments