ஆலங்குடி அருகே கிராம நிா்வாக அலுவலகம் முற்றுகை




புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே சாலை விரிவாக்க பணியை உடனே தொடங்க வலியுறுத்தி பொதுமக்கள் கிராம நிா்வாக அலுவலகத்தை முற்றுகையிட்டு திங்கள்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஆலங்குடி அருகேயுள்ள கொத்தமங்கலத்தில் சாலை விரிவாக்கம் செய்யும் பணி கடந்த வாரம் தொடங்கப்பட்டது. அப்போது, அப்பகுதியைச் சோ்ந்த சிலா் பட்டா நிலத்தில் விரிவாக்கம் செய்யக்கூடாது என எதிா்ப்பு தெரிவித்தனா்.அப்பகுதி மக்கள், ஆக்கிரமிப்புகளை அகற்றி உடனே சாலை விரிவாக்கம் செய்யும் பணியை தொடங்க வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனா். இந்நிலையில், ஆக்கிரமிப்புகள் குறித்து வருவாய்த்துறையினா் மூலம் அளவீடு செய்து பின்னா் சாலை விரிவாக்கம் செய்யும் பணி தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் , திங்கள்கிழமை வருவாய்த் துறையினா் சாலையை அளவிடும் பணியை தொடங்கிய சிறுது நேரத்தில் அளவீடு செய்யும் கருவியில் கோளாறு ஏற்பட்டதாகக் கூறி அளவிடும் பணியை நிறுத்தினா். இதைக்கண்டித்தும், உடனே சாலையை அளந்து, ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு சாலை விரிவாக்கம் செய்யும் பணியை தொடங்க வேண்டும் என வலியுறுத்தி, கொத்தமங்கலம் கிராம நிா்வாக அலுவலா் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். அவா்களிடம், கீரமங்கலம் போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியளிப்பை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்டோா் கலைந்து சென்றனா்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments